பக்கம்:பரிசு மழை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர் ரா. சீனிவாசன் "என்ன செய்வது அவர் விருப்பப்படிதானே நாம் போக முடியும்". அடுத்தவரை அணுகினார். "ஐம்பது ரூபாய் தர முடியுமா” "என்னப்பா இது அநியாயமாக இருக்கிறதே" "வேறு வண்டியைப் பாருங்க" அடுத்தவரை அணுகினார். "அறுபது” என்றார். இனி ஏலக்கடையாகி விடும் என்று அஞ்ச வேண்டி இருந்தது. "வேறு வழியில்லை; பேசாமல் பஸ் பிடித்துப் போய் விடலாம்; மூன்று ரூபாயோடு முடிந்து விடும்" என்கிறார் அவர் அந்த அம்மையார் மறுத்து விட்டார். சிறிது தூரம் நடந்து சென்றனர். அந்தக் கூட்டத்தோடு தொடர்பு இல்லாத ஒரு ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது. "ஆட்டோ!" என்று குரல் கொடுத்தனர். அவர் நிறுத்தினார்; பேரம் பேசவில்லை; கொடியை இறக்கினார். வீடு வந்து சேர்ந்தார்கள். இருபது அது காட்டியது. அதற்கு மேல் ஐந்து தந்தார். அவர் மறுத்து விட்டார்; "எங்களை இழிவுபடுத்துகிறீர்” என்று சொல்லிவிடடுப் போய்விட்டார். "பஸ் அதில் போய் இருக்கலாமே" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/68&oldid=806912" இலிருந்து மீள்விக்கப்பட்டது