பக்கம்:பரிசு மழை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 67 "போய் இருககலாம்; நீங்கள் வாங்கித் தந்த முகூர்த்த சேலை; இது பட்டுப்புடவை; கசங்கி விடும்” என்றார் அந்த அம்மையார். 24. தியாகிகள் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் அவர் வேறு ஒன்றும் கொள்வாரோ? என்றார் பாரதியார். குண்டு அடிபடும் என்று தெரிந்தும் அவர் தன் மார்பைத் திறந்து காட்டியவர். புற முதுகு காட்டாத அவர் பேராண்மை கண்டு வெள்ளை நிறத்தவன் அவரை விட்டு வைத்தான்; அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவர் மார்பு எலும்புகளை அவனால் எண்ணிப் பார்க்க முடிந்தது. அநத எலும்புக் கூட்டை அவன் சுட விரும்பவில்லை. வீர சுதந்திரம் வேண்டி நின்று போராடிய வீரர் அவர். அன்று கழற்றிய சட்டை அவர் இன்றும் மாட்டிக் கொள்ளவில்லை. கேட்டால், "சலவைக்குக் கொடுத்திருக்கிறேன்; வரவில்லை" என்று நகைச்சுவை பட உரையாடுவார். அன்று ஒரு கொள்கைக்காகப் போட்டிருந்த கதர் வேட்டி இன்று அவர் உடுத்தும் உடையாக நின்று விட்டது. 'தியாகிகள் தினம்’ என்று கொண்டாடினார்கள். அங்கே இவரைப் போலவே பல மாஜி வீரர்கள் கூடுவது உண்டு. இவர் நிலமானியம் கேட்டுப் பெறவில்லை; ஒய்வுக்கு ஊதியம் பெறும் இழிநிலையை அவர் விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/69&oldid=806913" இலிருந்து மீள்விக்கப்பட்டது