பக்கம்:பரிசு மழை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர் ரா. சீனிவாசன் கேட்டால் "வீர சுதந்திரம் விரும்பி நின்றவர் வேறு ஒன்றும் கொள்ள மாட்டார்கள்" என்று கூறி வருகிறார். அபூர்வப் பிறவிகள் யாராவது கிடைத்தால் அவர்களை வைத்துப் பேட்டி காண்பது இன்று நடை முறை ஆகிவிட்டது. "தியாகி என்றால் உங்களைப் போல இருக்க வேண்டும்" என்று பாராட்டினர். "எப்படிச் சொல்கிறீர்?" "சட்டை கூடப் போடாமல் இருக்கிறீரே அதைக் குறிப்பிட்டோம்" என்றனர். "இந்த நாட்டில் அதற்கு வழி இல்லாமல் பல பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" என்று அவர் திருப்பிக் கொடுத்தார். "உங்களுக்கு எல்லாம் சிலை வைக்க வேண்டும்” என்றார் பேட்டிக்காரர். "சிலைகளாக இருக்கிறார்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள் பலர்; புதிய சிலைகள் தேவை இல்லை" என்றார். "அவர்கள் எல்லாம் தியாகிகள் ஆக முடியுமா?" என்று கேட்டனர். "பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இழந்து வாழ்கிறவர் பலர்; இன்று ஆதிக்கத்தையும் சுரண்டல் களையும் எதிர்க்க முடியாமல் சுதந்திரங்களை இழந்து தவிக்கும் நம் நாட்டு மக்களைத்தான் குறிப்பிடுகிறேன்; அவர்களும் தியாகிகள்தான்; வீர சுதந்திரம் அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/70&oldid=806915" இலிருந்து மீள்விக்கப்பட்டது