பக்கம்:பரிசு மழை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 69 "அன்று கல்கி இந்த தேசத்தைத் தியாக பூமி என்று கூறினார்; அந்தச் சொல் நிலைத்து விட்டது; சகல உரிமைகளையும் இழந்து தளை பட்டுக் கிடக்கிறது; அழிவுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நாடு தியாக பூமியாகி விட்டது. அவர் கூற்று நிலைத்து விட்டது" என்றார் அவர் 25. அறுவை சிகிச்சை அவள் அழகாக இருந்தது அவளுக்கே வேதனையாக இருந்தது. வீட்டு அறைகளில் அவள் கணவன் வித்தியாசம் காண்பது இல்லை. அவன் காதலன் படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனைத் திருத்துவதற்கு என்ன வழி? அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் சென்றாள். "ஐயா! என் முகத்தில் சிறிது மாற்றம் தேவை; அழகைக் குறைக்க வேண்டும்; முடியுமா?' என்று கேட்டாள். ஒரு பிரபல நடிகையின் மூக்கை அவர் சீர்திருத்தி இருக்கிறார்; பத்திரிகையில் அந்தச் செய்தி வந்தது. அவள் அழகு கூடிவிட்டது. அதனால் அதிக படங்களில் நடிக்கிறாள். தான் பேரழகி என்பதால் அவள் கலியாணத்தைத் தள்ளிப் போட்டு வருகிறாள்" என்று பேசிக் கொள்கிறார்கள். இது ஒரு புதுவித கோரிக்கையாக இருந்தது. "அழகைக் கெடுத்தால் என் பெயர் கெட்டு விடும்; முடியாது” என்று கூறி மறுத்துவிட்டார். "உன் கணவரை அனுப்பு: அவர் மன நோய்க்குச் சிகிச்சை தருகிறேன்" என்று கூறி அவளை அனுப்பினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/71&oldid=806916" இலிருந்து மீள்விக்கப்பட்டது