பக்கம்:பரிசு மழை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 0 டாக்டர் ரா. சீனிவாசன் அவள் கணவருக்குத் தக்க அறிவுரை சொல்லி அனுப்பினார் என்று தெரிகிறது. அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. அவள் கணவனின் அறுவைக்குச் சிகிச்சை நடந்தது. "நீர் மாறாவிட்டால் உன் மனைவியின் முகத்தைக் குரங்கு முகமாக மாற்ற நேரிடும்" என்று அவர் அச்சுறுத்தி அனுப்பினார் என்று தெரிந்தது. 26. நூறாவது ஆள் "சாவது என்பது ஒரு முறைதான்; வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை செத்துச் செத்து மடிகிறான்" என்பது பழமொழி. சாவினைச் சந்திக்கும் அழகான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. மருத்துவரிடம் சென்றார்; அப்படிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நாடி பார்த்து மருத்துவம் சொன்னது பழைய காலம்; தேர்வுகள் பல வைத்து ஆராய்ந்து பின் ஒரு கண்டுபிடிப்பு: அதன்பிறகுதான் தீர்வு. "என்ன செய்யவேண்டும்?" "அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்" "பிழைப்பேனா?” "நீர் நூறாவது ஆள்" இவருக்கு அச்சம் உண்டாகி விட்டது. "ஐம்பது பேரைக் கொன்றால் அரை வைத்தியர்; இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/72&oldid=806917" இலிருந்து மீள்விக்கப்பட்டது