பக்கம்:பரிசு மழை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 71 முழுவைத்தியர் ஆவதற்குத் தன்னைப் பயன்படுத்த விரும்புகிறார்" என்ற முடிவுக்கு வந்தார். "சிகிச்சை செய்து கொள்ளாமல் இருந்தால் என்ன լb 2 "மெல்ல மெல்லச் சாவினைச் சந்திக்கலாம்" "அறுத்துக் கொண்டால்” "அது உன் அதிருஷ்டம்" என்று கூறினார். "எப்படியும் சாவது உறுதி; அவர் கையாலேயே சாவது மேல்; தனக்கு விடுதலை கிடைக்கும். அவரும் நூறாவது விழா அழகாக நடத்தலாம்” என்று முடிவு செய்தார். சாவைப் பற்றிய சிந்தனைகள் அவரை ஆட் கொண்டன; அவருக்கு ஒரு ஆசை இருந்தது; அவர் ஒரு எழுத்தாளர் மரணத்தின் வாசலிலே என்ற அழகான நாவல் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை அச்சிடாமல் போகிறோமே என்ற மனக்கவலை மட்டும் இருந்தது. தனக்குப்பின்னால் யாரும் தன் நூலை அச்சிட மாட்டார்கள்; அந்தக் கவலை மட்டும் அவரை வாட்டியது. நோய் வாய்ப்பட்டதும் எழுந்த கற்பனை அது. வீடு வாசல் மனைவி மக்கள் நண்பர்கள் அவர்கள் தாமாக விலகி நின்றனர். இவர் பயணத்துக்கு வழிவிட்டு அவரை மருத்துவரிடம் ஒப்புவித்தனர். 'உறங்குவது போலும் சாக்காடு என்று அவர் படித்த திருக்குறள்பா அவருக்கு ஆறுதல் தரவில்லை. இறப்பு என்பது அஞ்சத் தக்கது அல்ல; நோயின் கொடுமையில் இருந்து தப்புவதற்கு அதைவிட வேறு மருந்து கிடையாது. தூக்குக் கைதிக்கு விடுதலை என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/73&oldid=806918" இலிருந்து மீள்விக்கப்பட்டது