பக்கம்:பரிசு மழை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 டாக்டர் ரா. சீனிவாசன் அவன் மகிழ்வு அடைவான்; அதே மனநிலையை இவர் சாகப் போகிறோம் என்பதில் அடைய முடிந்தது. நோயால் துன்பப்பட்டு நாளும் மெலிந்து எலும்புக் கூடாக மாறுவதை விட இந்த விடுதலை மகோன்னதுமானது எனற முடிவுக்கு வந்தார். "எப்படியும் பிழைக்கப் போவது இல்லை; அவரிடம் இன்று உடம்பை ஒப்படைப்போம்: ஒருவேளை அதிருஷ்டம் இருந்தால் உயிர் பிழைப்போம்: அச்சிடாத நூலை அச்சிட்டு முடிக்கலாம்" என்ற சிறிய ஆசையும் அவரிடம் அமைந்தது. "ஐயா சாவு ஒன்றுதான்; உம் கையால் சாவதற்கும் மெல்ல மெல்லச் சாவதற்கும் என்ன வேறுபாடு?" "சாவதே தெரியாது; துன்பம் இருக்காது. மயக்கம் தருவோம்; அதனின்று மீளத்தேவை இல்லை. ஆனால் ஒன்று எங்களுக்கு உரிய கட்டணம் தரவேண்டும். மெல்லச் செத்தால் வேதனைமிகுதி; மற்றவர்களுக்குச் சுமை; உன்னை யாரும் பாராட்ட மாட்டார்கள் எப்பொழுது ஒழிவான் என்று எதிர்பார்ப்பார்கள்" என்று விளக்கம் தந்தார். கடைசி காலத்தில் அவருக்கு நன்கொடை தந்து தருமம் செய்த புண்ணியமும் சேர்கிறது. அது அவரை ஆதரிப்பதாக இருக்கும். நல்ல பேரோடேயே போய்ச் சேர்வது நல்லது மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது' என்ற முடிவுக்கு வந்தார். ஒரு சிலர் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தொழிலாளிகள் சிலரின் வாழ்வைப் போல வேதனைப் படுவதையும் பார்த்து இருக்கிறார். குற்றுயிரும் குறை உயிருமாக வாழ்வது கொடுமை என்பதை அறிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/74&oldid=806919" இலிருந்து மீள்விக்கப்பட்டது