பக்கம்:பரிசு மழை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 73 y 'ஐயா அடுத்து உம் விருப்பை நிறைவேற்றிக் கொள்' என்று சற்று வெறுப்போடு கூறி விடுதலை பெற்றார். ஊசி போடப்பட்டது; மயக்கம் அவரை سانچے கொண்டது. அவர் அபிப்பிராயம் தருவதற்கு அவர் வாய் பேசுவதை நிறுத்திக் கொண்டார். கடைசி முறையாக அவர் மனைவி கண்ணிர் விட்டாள்; தாலியைத் தொட்டுக் கண்ணிரில் நனைத்து அதற்கு அபிஷேகம் செய்தாள்; தெய்வத்தை வேண்டினாள். பிள்ளைகள் இரண்டுபேரும் தயாராயினர். புகழ்பட வாழ்ந்தார்; அதனால் பூமாலைகளும் காத்து இருந்தன. மயக்கம் நீங்கியது; மறுபடியும் வாழ்க்கை அவரை அழைத்தது. மருத்துவர் அவரைப் பாராட்டினார். நீங்கள் பிழைத்துக் கொண்டீர்கள். இனி எந்த பயமும் இல்லை. இதுவரை தொண்ணுற்று ஒன்பது பேருக்குச் செய்து இருக்கிறேன்; அனைவரும் பிழைத்தவரே, யாரும் சாகவில்லை; நீர் நூறாவது ஆள்" என்றார். நூறாவது ஆள் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது. அதற்கு உண்மையான பொருளை அறிந்து வெளிப்பட்டார். மரணத்தின் வாசலில் இருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த நூல் அச்சிடத் தேவை இல்லை என்று அதைக் கிழித்து விட்டார் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/75&oldid=806920" இலிருந்து மீள்விக்கப்பட்டது