பக்கம்:பரிசு மழை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ல் டாக்டர் ரா. சீனிவாசன் 27. பிராய சித்தம் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சிச் அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை இந்த அவனியிலே என்று எதற்கோ சொன்னான் பாரதி. இந்தப் பெண்ணைப் பெற்றவள் அஞ்சி அஞ்சிச் செத்தாள் தன் பெண்ணை வேலைக்கு அனுப்புவதற்கு. அவளுக்கு இரண்டு பையன்கள்; ஒரு பெண். பையன்கள் இருவரும் சின்னவர்கள்; இவள்தான் பெரியவள். அவள் வீட்டுவேலை செய்து காலத்தை ஒட்டி வந்தாள். பற்றாக்குறை என்பது அவள் ஒட்டுப் போட்ட உடை உணர்த்தியது; வீட்டில் அந்தப்பிள்ளைகளைத் தவிர வேறு எதுவும் சுமையில்லை; தேவைக்குமேல் அவள் புருஷன்தான் இருந்தான்; அவன் குடித்துவிட்டு வேலை செய்யாமல் சுருண்டு கிடப்பான். இவள் ஒருத்தியே மூவரையும் இந்த நாலாம் ஆளையும் சுமந்து வந்தாள். சுமை நிரம்பிய வண்டியை அவள் ஒருத்தியே முன் இருந்து இழுத்துச் சென்றாள்; பின்னால் இருந்து யாராவது ஒருவர் தள்ளினால் அந்த வண்டி வேகமாக ஓடா விட்டாலும் நகர்ந்து செல்வதில் சிரமம் இருக்காது. "உன் பெண் படித்திருக்கிறாளே வேலைக்கு அனுப்பலாமே" "பயமாக இருக்கிறது; இதுவரை தனியாக அனுப்பியது இல்லை; யார் எப்படி இருப்பார்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/76&oldid=806921" இலிருந்து மீள்விக்கப்பட்டது