பக்கம்:பரிசு மழை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 75 சொல்ல முடியாது. மானம் போனால் கோடி கொடுத்தாலும் திரும்பிவராது. அதற்கப்புறம் ஒரு முழம் கயிறுதான” என்று தத்துவம் பேசினாள். "அனுப்பு ஒன்றும் ஆகாது” என்று மற்றவர் கூறினார். மகளின் தோற்றம் அந்த நம்பிக்கையை அளித்தது; அதனால் இந்த நம்பிக்கையை அளித்தார். அவரே ஒரு இடத்திற்கு சிபாரிசு செய்தார். அவள்தாயின் நம்பிக்கை வீண்போகவில்லை; அவளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. நடக்காதது நடந்து விட்டது என்பது செய்தி. அவள் தாய் அலறிக் கொண்டு வந்தார். ஒரு முழக் கயிறு கேட்பாள் என்று இவர் எதிர்பார்த்தார். ஒரு முழம் இல்லை. காசு அவள் தேவையான அளவு வாங்கிக் கொள்வாள் என்று காசு கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். அலறினாள் துடித்தாள்: வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்று தானே அடங்கி விட்டாள். மாதங்கள் சில சென்றன. அந்தப் பெண் என்ன ஆனாள்? விசாரித்தார். அந்தப் பெண் அங்கேதான் வேலை செய்து வருகிறாள் என்று தெரிந்தது. கூச்சலும் குழப்பமும் இருந்தன; பின் என்ன ஆயிற்று? தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/77&oldid=806922" இலிருந்து மீள்விக்கப்பட்டது