பக்கம்:பரிசு மழை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர் ரா. சீனிவாசன் அந்தப் பெண் தனியே வந்தாள்; மஞ்சள் கடிதம் தந்தாள்; சில பேர் திவால் ஆகிவிட்டால் நீட்டும் வழக்கு மன்றக் கடிதம் அல்ல. திருமண இதழ்' வெறும் மஞ்சள் - கடிதம்தான். அட்டைகள் மட்டைகள் அல்ல; கோயிலில் எளிய முறையில் நடக்க இருக்கிறது என்பது தெரிந்தது. "எப்படி இது முடிந்தது? கெடுத்தவன்? "தொடர்ந்து கெடுக்க ஒப்புக் கொண்டார்" என்று சிரித்துக் கொண்டே அவள் விடை பெற்றாள். 28. சட்டவிவகாரம் வெட்டு குத்து இல்லாமல் எந்த விவகாரமும் தொடராது. இது ஆளைப் பற்றியது இல்லை; வாழைச் செடியைப் பற்றியது; அதை வெட்டிச் சாய்த்து அவர் வீட்டு முன்னால் அதன் குலை நடுங்கும்படி நிற்கவைத்தார். அது தனியாக இருந்தது. முதலில் அதற்குக் கலியாணம் பண்ணி வைத்துத் தன் இதர வேலைகளைக் கவனித்தார்; இணையாக மற்றொன்றை வாசலில் மற்றொரு பக்கத்தில் நட்டு வைத்தார்; மூங்கில்கள் உடன் நட்டு ஒலைகள் போட்டு மணப்பந்தல் ஆக்கினார். அந்த வீடு அலங்கார வீடு ஆகியது. அந்த வாழைக் குலைகள் பறிப்பார் கண்ணைக் கவர்ந்தன. மற்றவர்கள் வாலிபர்கள் ஆயினார்கள். கவர்ச்சியால் இழுக்கப்பட்டனர். அந்தக் குலைகளுக்கு உரியவர் உள்ளே போகும் வரை காத்திருந்தனர். அதன்பின் சேலை உரிப்பது போல் அதன் பட்டைகளில் கை வைத்தனர்; காய்களை ஒன்றன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/78&oldid=806923" இலிருந்து மீள்விக்கப்பட்டது