பக்கம்:பரிசு மழை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 77 பின் ஒன்றாகப் பறித்தனர். அவர்கள் வழிபறிக் கொள்ளையர் ஆயினர். தேவைக்கு மேல் அவர்கள் கைக்கு வந்ததும் அவர்கள் அவற்றை விலைபொருள் ஆக்கினர். காயைத் தின்றவர்கள் அதன் சுவையைப் பாராட்டி அந்த வாழைக்கு உரியவரிடம் கூறினர். அறுத்தது யார் ? பறித்தது யார்? என்று விளங்கவில்லை; அப்பாவி ஒருவர் அகப்பட்டார். அவரைப் பிடித்து அலைக்கழித்தனர். இவர்கள் செல்வாக்கு உடையவர்கள்; அதனால் காவல் துறையினர் காலதாமதம் செய்யாமல் தொலை பேசியில் கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்தனர். அவனைக் கட்டிப் பிடித்துக் கதறஅடித்தனர். அவன் தான் நிரபராதி என்று கூறிப்பார்த்தான் அவர்கள் கேட்பதாக இல்லை. அவன் கதறலைக் கண்டு அனுதாபம் தெரிவித்தனர் ஒருவர் இருவர். அதிகம் தண்டனை போடாமல் பார்த்துக் கொள்கிறோம்; என்று போலீசுகாரரே சமாதானம் கூறினர். 'ஏதாவது அபராதம் போடுவார்கள்; எழுபது எண்பது அதுக்குமேல் போகாது' என்று தண்டனையின் அளவையும் கூறினர். "நான் குற்றம் செய்யவில்லை” என்று உரக்கக் கத்தினான். "நீ திருடி இருக்கிறாயே!” என்றார் காவல் காப்பாளர். "சரி ஒப்புக் கொள்கிறேன்; எங்கிருந்து எடுத்தேன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/79&oldid=806924" இலிருந்து மீள்விக்கப்பட்டது