பக்கம்:பரிசு மழை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - டாக்டர் ரா. சீனிவாசன் "தெருவில் அவர்கள் கட்டி வைத்தார்கள்; அங்கிருந்து பறித்தாய்." "அவர்கள் வீட்டில் இருந்து பறிக்கவில்லையே” "தெருவில் இருந்துதான்; அவர்களுடைய மரம் தான் அது" "அவர்கள் வெட்டி வெளியே போட்டுவிட்டார்கள்; தெருவிலே போட்டு விட்ட குப்பை, அதை யாரும் பொறுக்க உரிமை உண்டு. இது வெறும் குப்பை, அதுமட்டும் அல்ல; அவர்கள் வீட்டில் அல்ல; தெரு பொது இடம்; அவர்களுக்கு வழக்குத் தொடர உரிமை இல்லை. முதலில் அவர்கள் அந்த மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள். அது படுகொலை; அதற்குத் தண்டனை தரமுடியும் என்றால் எனக்குத் தரலாம்" என்றான். சட்டச் சிக்கலை அவன் ஏற்படுத்தி வைத்தான். "வாழை மரங்களை அவை முதிர்ந்து முற்றுப் பெறும் முன் வெட்டுதல் பொருளாதாரச் சேதம்; இன்னும் சில நாள் விட்டு வைத்திருந்தால் காய்கள் முதிர்ந்து அவை தாமாக உதிர்ந்து இருக்கும்; அதனுடைய வாழும் காலம் இன்னும் உள்ளது. அதற்குள் அவற்றின் ஆயுளைக் குறைத்தது அதர்மம்; சட்டப்படி தண்டிக்க முடியாது என்றாலும் வீண் ஆடம்பரங்களுக்கு மரங்களை வெட்டுவது மாபாதகம்' என்று ஒரு சிலர் பேசிக் கொண்டே சென்றனர். அந்தப் பையன் "நான் சுப்ரீம் கோர்ட்டுவரை போவேன்” என்று கதறினான். அவன் சட்டம் தெரிந்தவனாகத் தெரிவித்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/80&oldid=806926" இலிருந்து மீள்விக்கப்பட்டது