பக்கம்:பரிசு மழை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 79 "நாளைக்கு வாழ்க்கை எப்படி? என்று கேள்விக்கு உரியவர்கள் எல்லாம் இன்று சுப்ரீம் கோர்ட்டு என்று பேசும் நிலைவந்து விட்டது” என்று ஒரு சிலர் குறிப்புகள் தந்தனர். "காலம் அப்படி எந்த வழக்கும் இன்று மூன்றாம்படி கட்டு ஏறியபிறகுதான் தீர்கிறது. இளைய தலைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன" என்று மற்றவர் இந்தக் காலத்துச் சூழ்நிலையைக் குறிப்பிட்டார். காவலர் அவன் கட்டை அவிழ்த்து விட்டனர்; இந்த இக்கட்டில் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. "அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது" என்று தீர்ப்புக் கூறிவிட்டுச் செலவு பெற்றுச் சென்றனர். 29. வளர்த்த குறை அவனுக்கு வயது முப்பது; அவன் தாய்க்கு அதே கவலை; வயது ஆவது ஒரு கவலை என்றால் அது ஆச்சரியப்படத் தக்கதுதான். ஏதோ பெண்ணைப் பெற்றுவிட்டு மடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாகப் பொறுப்புள்ள தாய் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்; தாய் ஒருத்தி இவ்வாறு கூறுவது விசாரணைக்குக் காரணம் ஆக அமைந்தது. "ஏன் அவன் கலியாணம் பண்ணிக் கொள்ள மறுக்கிறான்?" "அதுதான் விளங்கவில்லை" "யாராவது அவனிடம் பேச்சுக் கொடுப்பார்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/81&oldid=806927" இலிருந்து மீள்விக்கப்பட்டது