பக்கம்:பரிசு மழை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 0 டாக்டர் ரா. சீனிவாசன் "எப்பப்பா எங்களுக்கு இலை போடப் போகிறாய்? என்று கேட்டு விட்டால் அவன் மறுபடியும் அவர்களைச் சந்திக்க மறுக்கிறான். அந்தத் திசையே அவனுக்கு வடக்காகத் தெரிகிறது; வாடைக் காற்றாக அது அவனுக்குத் தோன்றுகிறது." அந்தப் பையனைப் பற்றி மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. "அவன் பிறந்த மேனியனாக இருக்கிறான்; அவனிடம் எந்தப் பழக்கமும் இல்லை” என்றார் அவன் தாய், "ஒரு சிகரெட்டுப் பிடிக்க மாட்டான். சினிமா பார்க்க மாட்டான், எந்தப் பையனோடும் சேர்ந்து திரியமாட்டான்; யாரும் அவனைப் பற்றிக் கெட்டவன் என்று ஒரு சொல் கூறிக் கேட்டது இல்லை." அவன் தங்கமான குணத்தின் எடை இவ்வாறு விவரிக்கப்பட்டது. 'டி.வி பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டான்.” சந்தோஷம் என்பது என்ன என்றே அவன் கண்டது இல்லை என்று தெரிந்தது. "சிறுவயதில் இருந்து இப்படித் தானா இருப்பான்?" { { தாய் சொல் தட்டியது இல்லை; கிழித்த கோடுகளைத் தாண்டியது இல்லை; நான் அப்படி வளர்த்து இருக்கிறேன் பெண்களை வளர்த்து வருவது போல அவனை வளர்த்து விட்டேன்" என்றார் அந்தத் தாய். குறை தெரிந்தது; ஒருவன் சந்தோஷமாக வாழவும் பழக்கம் தேவை; தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/82&oldid=806928" இலிருந்து மீள்விக்கப்பட்டது