பக்கம்:பரிசு மழை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 81 என்றது அதன் பொருள் தீமைகளுக்கு மட்டும் சுட்டிக் காட்டப் பயன்படுத்தினர். "அவனைத் தீய பழக்கங்களிலும் விட்டு இருக்க வேண்டும்; அவனை நீங்கள்தான் கெடுத்துவிட்டீர்” என்று கேட்டுக் கொண்டிருந்தவர் பதில் சொன்னார். இன்று நீதி நூல்கள் எவ்வளவு தூரம் மக்களைக் கெடுக்கின்றன என்பதற்கு அவன் வாழ்க்கை ஒரு எடுத்துக் காட்டாக விளங்கியது. 'நீதிக்குத் தலைவணங்கு' என்று யாரோ ஒரு பாட்டின் வரியை ஒப்புவித்தார். “நல்லது கெட்டது இரண்டும் அறிந்தால்தான் ஒருவன் முழுஞானம் உடையவனாக விளங்க முடியும் என்பதைத் தைரியமாகச் சொல்லமுடியுமா?" இது கேள்வி. 'நீங்கள் அவனைக் கட்டுப் பாட்டோடு வளர்த்தீர்கள் இன்று அந்தக் கட்டுப்பாடே ஒரு பிரச்சனை ஆகிவிட்டது' என்று அந்த அம்மையாருக்கு அறிவு கூறினார். 'நடந்தது நடந்து விட்டது. எப்படி அவனைத் திருத்துவது." "தாய் திருத்த முடியாது; ஒரு பேய் வந்து மாற்றுவாள்; கவலைப்படாதீர்” என்ற சொல்லி அனுப்பினார். 30 குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் அவர் மலை குலைந்தாலும் நிலை குலையாத மனம் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் என்ன? எப்படி அவரால் முடிந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/83&oldid=806929" இலிருந்து மீள்விக்கப்பட்டது