பக்கம்:பரிசு மழை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 6 டாக்டர் ரா. சீனிவாசன் அவர் ஆபீசில் அவருக்கு மிகவும் நல்ல பெயர்; "அவருக்குக் கோபமே வந்து பார்த்தது இல்லை" என்று கூறுகிறார்கள். பியூன் காஃபி கொண்டு வந்து வைக்கிறான்; அதை அவன் சரியாக வைக்கவில்லை; அது அவன் கைபட்டுச் சரிந்து விடுகிறது. அது கண்ணாடியால் செய்யப்பட்டது என்று தன்னைக் காட்டிக் கொண்டது. தட்டு அச்சுத் தொழில் செய்யும் தகையாள் ஒருத்தி அவள் தப்புத் தப்பாக டைப் அடித்துக் கொண்டு வந்து முன் வைத்தாள். மூன்று முறை திருத்தி அனுப்பினார்; நாலாவது முறையே அது சரி என்று ஏற்கப்பட்டது. அவருடைய மேலதிகாரி இவர்மீது தவறு இல்லை எனினும் இவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சூழ்நிலை. "நீங்கள் எல்லாம் எதற்கு ஐயா பதவி வகிக்கிறீர்; முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்; நீங்கள் இப்படிச் செய்து இருக்கக் கூடாது. முதலில் இந்த இடத்தைக் காலி செய்; லாயக்கில்லை" என்று கத்துகிறார். சிறிது சலனமும் காட்டாமல் அங்குத் தான்செய்தது தவறு இல்லை என்பதைப் பொறுமையாகக் காட்டினார். அவர் வெட்கித் தலை குனிந்தார். இவர் பொறுமையைக் கண்டு ஆபீசே அதிசயம் அடைந்தது. அந்த நிறுவனம் எல்லா வகையிலும் முன்னேறியது: அதற்குக் காரணம் அவர் பொறுமையும் நிதானமும் என்று பாராட்டப்பட்டது. இவருக்கு இந்தப் பயிற்சி எப்படிக் கிடைத்தது? வியப்பாகவே இருந்தது. அவர் படித்த திருக்குறள் தலைப்பு யாது என்று அறிய ஆவல் பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/84&oldid=806930" இலிருந்து மீள்விக்கப்பட்டது