பக்கம்:பரிசு மழை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 83 அவர் வாழ்க்கைத் துணைநலம்தான் காரணமாக இருக்க வேண்டும் என்ற ஒரு ஐயம் எழுந்தது. அவர் மற்றவரை வீட்டுக்கு அழைத்து இருந்தார்: அவர் சொந்த விஷயம் அது; ஆபீசு விஷயத்தை அவர் வீட்டில் பேசுவது இல்லை. அதை அவர் தவிர்த்தார். அவர் மனைவிதான் என்று தெரிந்தது; குரலில் கடுமை வெளிப்பட்டது. அவர் பையன் படிக்காமல் இருந்ததால் அந்த அம்மையார் சீறிவிழுந்தார். தட்டுமுட்டுகள் எல்லாம் அவளோடு சண்டை போட்டுக் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தன. அந்த அம்மையார் இவரோடு பேசுவதே இடியும் மின்னலுமாக இருந்தது. வேலைக்காரியுடன் ஒரே சண்டை அவள் குரல் இந்த அம்மையாருக்கு ஈடு கொடுத்தது; இருவரும் ஒருவருக் கொருவர் சளைக்கவில்லை. அந்த வீடு அமர்க்களப்பட்டது. அவர் எதிர்ப்புச் சிறிது கூட காட்டாமல் அமைதியாக இருந்தது வியப்பைத் தந்தது. அவர் வெற்றிக்குக் காரணம் விளங்கியது. 31. பொழுது போக்கு அவருக்கு ஒரே ஒரு மனைவி; பிள்ளைகள் எல்லாம் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறி விட்டனர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/85&oldid=806931" இலிருந்து மீள்விக்கப்பட்டது