பக்கம்:பரிசு மழை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ல் டாக்டர் ரா. சீனிவாசன் அதனால் அவருக்குத் துணையாக இருந்தவர் ஒரே ஒரு மனைவிதான். அந்த வீடு வெறிச்சிட்டது; ஆரம்பத்தில் அவர்கள் இருவர்தாம் இருந்தனர்; பின்னால் தன் பிள்ளைகள் அவர்கள் போய் விட்ட பிறகு அந்த வீடு தனிமை பெற்றது. அவர்கள் சண்டைக்குக் காரணம் அதை எழுதிப் பக்கங்களை வீண்படுத்துவது எழுத்து தர்மம் அல்ல; அவர்கள் போய் விட்டார்கள்; இங்கு இருக்கப் பிடிக்கவில்லை; அவ்வளவுதான். கண்விழித்துப் பார்த்ததும் அவர் முதலில் யார் முகத்திலும் விழிக்கமாட்டார்; அவர் ஓய்வு பெற்ற அதிகாரி ஆகையால் ஆங்கிலப் பத்திரிகை படிப்பார்; முதலில் புரட்டுவார்; தலைப்புகளைப் பார்ப்பார்; மடித்துவிட்டுச் சூடாகக் காஃபி குடிப்பார்; பத்திரிகைகளைப் புரட்டினாலே கிளர்ச்சிகள், அடிதடிகள்; துப்பாக்கிச் சூடுகள்; பாம்ப் வெடிப்புகள் இவையே அவர் படிப்புகள். வீட்டுவேலைக்காரி வீட்டைச் சுத்தமாகப் பெருக்கிவிட்டு எல்லாவற்றையும் துடைத்துவிட்டு அந்த லட்சுமி வெளியேறி விடுவாள், அவள் பெயர் அது. அதற்கப்புறம் ஒரே துணை; பேச்சுக் கொடுத்தாலே வந்தது வினை; ஓயாத வாதங்கள்; ஒரே சண்டை; அவர்கள் ஆதிக்கக் குரலில் அவரை அடக்க முயற்சிப்பார்; இவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கும். பிள்ளைகள் சண்டை போட்டுச் சென்றதற்கு யார் காரணம்? அது குறித்துத்தான் விவாதங்கள் தொடரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/86&oldid=806932" இலிருந்து மீள்விக்கப்பட்டது