பக்கம்:பரிசு மழை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 85 "நீ தான் காரணம், மருமகளை நீ இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது" என்பார் அவர், "நீங்கள் உங்கள் வாயால் அவர்களை வீட்டை விட்டுப் போகலாம் என்று சொல்லி இருக்கக் கூடாது. அவன் உங்கள் வயிற்றுப் பிள்ளை; அவனை இப்படிச் சொல்லி இருக்கக்கூடாது" என்பாள் அவர் துணைவியார். "அவன் பெண்டாட்டிப் பேச்சுக் கேட்டு ஆடறான்; சொந்த புத்தி இல்லை" என்று இவர் சுட்டிக் காட்டுவார். "எல்லாம் உங்களுக்கு அவசரம்; கொஞ்சம் பொறுத்து இருக்கலாம்" என்று அங்கலாய்ப்பாள் அவள். அவர்கள் இருவரும் கருத்து ஒருமித்து உரையாடி யதையே பார்க்க முடியாது. விவாதங்கள் இருந்தால்தான் சட்டசபைகளே களை கட்டுகிறது. இந்த அம்மையாரும் வெளி நடப்பு நடப்பதாக மிரட்டுவார்கள். இவரும் அவைத்தலைவர்கள்போல் அவசரப்படுவார்; அந்த அம்மா முகம் தூக்கிக் கொண்டு 'உம்' என்று இருப்பார். காலை அரும்பிப் பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்தப் போர்; சதா கூச்சல்தான், மென்மையே இழந்து விட்ட நிலைமை. கேட்டால், 'இதுதான் எங்களுக்குப் பொழுது போக்கு" என்று நகைச் சுவையாகச் சொல்லி விடுவார். இந்த இரைச்சலை மறப்பதற்கு அவர் டி.வியைத் திருப்புகிறார். அதிலும் மாறிமாறிச் சண்டைக் காட்சிகள்; அவற்றைப் பார்ப்பது அவர்களுக்குப் பொழுது போக்காக அமைந்தது. அது அவர்களுக்கு அமைதியைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/87&oldid=806933" இலிருந்து மீள்விக்கப்பட்டது