பக்கம்:பரிசு மழை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர் ரா. சீனிவாசன் 32. கூட்டு அவள் கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனித்துப் பிரிந்து சுதந்திரமாகச் செயல்பட்டாள். அவள் உரிமையோடு செயல்பட்டாள்; அவர்கள் உரிமையோடு செயல்பட முடிந்தது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு சிறு சச்சரவு ஏற்பட்டது; உப்பு இருவர் போட்டு விட்டனர்; சமையல் அன்று கெட்டு விட்டது. சமையல் அறையே பிரச்சனையின் தொடக்கமாக அமைந்தது; அதுமுதல் 'கூட்டு என்ற சொல்லே மருமகளுக்குப் பிடிக்கவில்லை; அவள் "தனிக்குடித்தனம்" என்றாள். 'கூட்டுச் சேராக் கொள்கையே சிறந்தது என்பது அவள் சித்தாந்தமாக இருந்தது. சமையலிலும் கூட்டு என்ற சொல்லே அவளுக்குப் பிடிக்காது. அது அவளுக்கு அலுத்து விட்டது. ஆனால் தினமும் சமையல் செய்யும் முன் கூட்டு யோசனை செய்தே அன்றைய மெனுவை நிர்ணயிப்பாள்; அவனுக்கு எது பிடிக்கும் என்று வந்து கேட்டு அவனை அரிப்பாள். அவன் காலையில் ஆபீசுக்குப் போவதற்குப் புறப்பட்டுக் கொண்டு இருப்பான்; ஆபீசு பைல்களை ஒரு முறை புரட்டிப் பார்த்து அடுக்கி வைப்பான். இடையிலே இந்தக் கொஞ்சல் நடக்கும் "இன்னைக்கு என்ன செய்வது?" என்று கேட்பாள். நோயாளியை விசாரிப்பது போல அந்தக் கேள்வி இருக்கும். "எனக்கு எது போட்டாலும் மறுப்புச் சொல்ல மாட்டேன்; கழுத்தை நீட்டிய பிறகு குனிய வேண்டியது தானே” என்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/88&oldid=806934" இலிருந்து மீள்விக்கப்பட்டது