பக்கம்:பரிசு மழை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 87 'நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்களே உவமை பொருத்தமாக இல்லையே" என்று குத்திக் காட்டுவாள். "சாப்பாட்டுக்கு உட்கார்ந்த பிறகு நீ போட்டதைச் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்." "அப்புறம் இது சரியாக இல்லை. அது சரியாக இல்லை என்று சொல்லக்கூடாது" என்று ஆணையிட்டுக் கூறினாள். "மாற்றம் தேவை ஒப்புக் கொள்கிறேன்; ஏதாவது மாற்றிச் செய்" என்றார். "அது உங்களுக்குப் பிடிக்க வேண்டுமே” "சரி! நான் சொல்கிறேன் கூட்டு என்றார். அந்தச் சொல்லே அவளுக்கு அலெர்ஜியாக இருந்தது; கூட்டுக் குடும்பம் கூடாது; தனித்து இயங்குவது என்று உறுதியோடு வெளியேறியவள் அவள். அந்தச் சொல்லே அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. 'கொள்ளையடிக்கச் சென்றாலும் கூட்டுக் கூடாதுங்க, அது என்றைக்கும் கெடுதி” என்று அறிவுரை கூறினாள். கூட்டுக்கும் கொள்ளைக்கும் உள்ள தொடர்பை அவள் சுட்டிக் காட்டினாள். டெல்லியில் இருந்து ஒரு மாஜித் தலைவர் உதிர்த்த சொற்கள் நினைவுக்கு வந்தன. "அரசியலில் யாரோடு வேண்டுமானாலும் கூட்டுச் சேரலாம்” என்று தெரிவித்தார். அவள் கூட்டுச் சேர்க்காத கொள்கையில் நிலைத்து நின்றாள்; அவன் கேட்ட கூட்டு அவள் சமைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/89&oldid=806935" இலிருந்து மீள்விக்கப்பட்டது