பக்கம்:பரிசு மழை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ல் டாக்டர் ரா. சீனிவாசன் 33. ரொட்டித் துண்டு "சட்டப்படி எதுவும் நடை பெறுவது இல்லை" என்று அவர் கூறிக் கொண்டு இருந்தார். சட்ட மீறல் செய்து இவர் சிறைக்குப் போவதற்குத் தயார் ஆகுவது போல இருந்தது அவர் பேச்சு. சட்டத்துறைக்கும் இந்தச் சட்ட நாதனுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கத் தூண்டியது. சட்ட நாதன் என்பது அவனுக்கு அவன் பெற்றோர்கள் சிந்தித்து முடிவு செய்து வழங்கிய பெயர் அது. "போலீசு வேலைக்குப் போக இருக்கிறேன்; அதற்குப் பணம் தேவை?” என்றார். "அதற்கு உடற்கட்டுத் தேவை” என்றார் மற்றவர். "பணக் கட்டும் தேவைப்படுகிறது” என்று கூறினார். "காலம் கெட்டு விட்டது” என்றார் மற்றவர். 'காலத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்றார் சட்டநாதன். "என்ன செய்யப் போகிறாய்?" "திருட வேண்டியதுதான்" என்றார். "சட்டத்தைக் காக்கச் செல்கிற நீயே சட்ட மீறல் செய்யலாமா?” என்றார். “நல்ல காரியத்துக்குப் பொய் சொல்லலாம். அதுபோலத் தான் இதுவும்" என்றார். அவர் காவல் நிலையத்தில் சேர்ந்தார். அவர் ஆசை நிறைவேறியது; விலங்கிடும் தொழில் அல்ல; விலங்கு இடப்பட்டு அங்குச் சேர்க்கப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/90&oldid=806937" இலிருந்து மீள்விக்கப்பட்டது