பக்கம்:பரிசு மழை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 89 34. தூவானம் விடவில்லை அவர் ஒரு கார் வைத்திருந்தார்; விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதை விலை கொடுத்து வாங்கினார். அடிக்கடி நின்று விட்டு அது சத்தியாக்கிரகம் செய்தது தள்ளினால்தான் அது நகரும்; பிறகு சீறி எழுந்து பாயும். அது கட்டிய மனைவி போல ஒட்டி உறவாடியது. அது தொல்லை கொடுத்தது; அதை விலக்க இயலவில்லை. பழமை பாராட்ட வேண்டிஇருந்தது. அதனைக் கடைசியில் அடிமாட்டுக்கு விற்க வேண்டி இருந்தது: யாரோ ஒரு புண்ணியவான் கள்ளக் கடத்தலுக்கு ஏற்றது என்று அந்தப் பாவத் தொழில் செய்வதற்கு வாங்கிக் கொண்டான். போலீசு பிடித்துக் கொண்டால் இழப்பு அதிகம் இல்லை; அதனால் அதை வாங்கி எடுத்துக் கொண்டு போய்விட்டான். இவர் கார் வைத்திருந்தபோது ஒரு அனுபவம்: அடிக்கடி சாலையில் நின்று சண்டித்தனம் செய்து வந்ததால் அதனைக் காவல் துறை நெறியினர் பார்த்து இருக்கிறார்; அவர் முகவரி தெரிந்து கொண்டு வந்து இவரைக் கவர்னர் ஆக்கினார். இவர் முன் நின்று சலியூட் அடிப்பார். அவர் தயவு அன்று தேவைப்பட்டது. வரும் போது எல்லாம் பத்து இருபது கொடுப்பது வழக்கம் ஆகி விட்டது. கட்டிக் கொடுத்த பெண் வீட்டுக்குத் திரும்பாமல் இருந்தால் பெற்றோர்க்கு மகிழ்ச்சி கடத்திச் சென்றவன் அதை வைத்துக் கொண்டு நன்றாக வாழ்வதாக அறிந்தார். விட்டது தொல்லை என்ற மன நிறைவேடு இருந்தார். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/91&oldid=806938" இலிருந்து மீள்விக்கப்பட்டது