பக்கம்:பரிசு மழை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர் ரா. சீனிவாசன் பத்து வருஷம் ஆகியது; அந்த நினைவே அவரைவிட்டு நீங்கியது; கார் எண்ணும், நிறமும் நினைவில் இல்லை. அந்தக் காவல் நெறியாளர் வந்து நிற்கிறார். பழைய சலியூட்; கை நீட்டுகிறார். இவரைக் காசு கேட்டு வாட்டுகிறார் அவர் மட்டும் இவரை விடுவதாக இல்லை. அடிக்கடி தொல்லை கொடுக்கிறார். காசிக்குப் போனாலும் கருமம் தொலைவது இல்லை. மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை. 35. முகராசி காலையில் ஏழு மணிக்கு அங்கு உட்காருகிறார்; மேல் துண்டைத் தரையில் விரிக்கிறார்; காசுகள் விழுகின்றன; பத்து மணிக்கு எல்லாம் அந்த இடத்தை விட்டு எழுகிறார். அப்புறம் அவரை அங்குக் காண்பது இல்லை. அவர் எதிரே மற்றொருவர் அதே நேரத்தில் தன் பையை விரிக்கிறார். வருகிறவர்கள் கால்களைத் தொட்டுத் தொழில் தொடங்குகிறார்; அவர்கள் கிழிந்த செருப்பு களுக்கு ஒட்டுப் போடுகிறார். மங்கியவற்றுக்கு ஒளி ஊட்டி அவர்களை அனுப்பி வைக்கிறார். இவர் அந்த இடத்தை விட்டு எழுவது இரவு ஆறு மணி. ஏறக்குறைய பத்து மணி நேர உழைப்பு. வருவாய் இருவருக்கும் ஏறக்குறைய ஒன்றுதான். ஏன் இந்த வித்தியாசம்? விசாரித்துப் பார்த்ததில் தெரிகிறது; இருவரும் ஒரே ஊர்தான். அது வந்தவாசி; முன்னவர் முகராசி, பின்னவர் அவர் கைராசி. இதுதான் வேறுபாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/92&oldid=806939" இலிருந்து மீள்விக்கப்பட்டது