பக்கம்:பரிசு மழை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 91 விளங்கவில்லையா; முன்னவர் ஒரு தொழுநோயாளி; பின்னவர் செருப்புத் தைக்கும் தொழிலாளி; அது அது அவர்கள் வந்த ராசி என்று முடிவு செய்ய வேண்டி உள்ளது. 36. அலுத்துவிட்டது நங்கையர் கல்லூரி அது அதிலிருந்து மங்கையர் தம் கையில் புத்தகங்களைத் தாங்கிக் கொண்டு வீடு திரும்பினர். அவர்கள் எந்தக் கதையையும் படைக்கவில்லை. படைக்கலாம்; அது நமக்குத் தெரியாது. ஒருத்தி மட்டும் அங்கு வந்து நிற்கும் காரில் இறங்கும் இளைஞன் பார்வைக்கு இலக்கு ஆகிறாள்; நம் பேனாவுக்கும் அவள் இலக்கு ஆகி இருந்தாள். தினம் மாலையில் அங்கு வந்து நிற்பான். அவள் அக்கினிப் பிரவேசம் செய்யப் போகிறாள் என்று ஜெயகாந்தன் கதை படித்தவர்கள் பேசிக் கொண்டனர். பரிவுணர்ச்சியோடு இந்த ஆசிரியர் அதைத் தீட்டக் காத்திருந்தார். வழக்கமாக வருபவன் அன்று வரவில்லை. புதியவன்; புதிய கார் வந்து நின்றது. அவள் அதில் ஏற மறுப்புத் தெரிவிக்கவில்லை. "அவர் எங்கே?' என்று கேட்டாள். "தினமும் நான் வேறு ஒரு கல்லூரி முகப்புக்குச் செல்வேன்; எனக்கு அலுத்துவிட்டது; எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது; அவனுக்கும் ஒரு மாற்றம் தேவைப் பட்டது; இடம் மாற்றிக் கொண்டோம்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/93&oldid=806940" இலிருந்து மீள்விக்கப்பட்டது