பக்கம்:பரிசு மழை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 6 டாக்டர் ரா. சீனிவாசன் அவளிடத்தில் எந்தச் சலனமும் ஏற்படவில்லை. எந்தக் காராக இருந்தால் என்ன? தனக்கு ஏற்றிச் செல்ல எதுவந்தால் என்ன? அதைப் பற்றி அவள் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. "அவள் கை மாறிவிட்டாள்" என்று பேசிக் கொண்டார்கள்; அவள் "கை மாறவில்லை; கார் தான் மாறினாள்" என்று தெரிந்தது. 37. விசாரணை முக்கண் படைத்தவன் சிவபெருமான்; அதனால் அவருக்குப் பெருமை என்று பேசப்படுகிறது. அவர் மூன்று மனைவியரைப் பெற்று இருந்தார். அது சிறுமை என்று சிலர் விமரிசித்தார்கள். ஏன் இவர் மூன்றைச் சேர்த்துக் கொண்டார்? விசாரணை தொடங்கியது. இது இன்றைய பத்திரிகைப் பாணி. நேரே அவர் வீட்டுக்குப் போனோம்; அவர் தாயாரைச் சந்தித்தோம். "உன் மகன் எப்படி?” 'அவன் நம்பியவரைக் கைவிட மாட்டான்; யாரையும் வஞ்சிக்க மாட்டான்; மறுப்பு என்பது அவனிடம் இல்லை; நேர்மை தவறாதவன்” என்று கூறினார். அவரையே சந்திப்பது என்று தீர்மானித்தோம். "ஏன் நீர் மூவரை மணந்து கொண்டீர்? பிள்ளை இல்லாத குறையா?” என்று நாகரிகமாகக் கேட்டு வைத்தோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/94&oldid=806941" இலிருந்து மீள்விக்கப்பட்டது