பக்கம்:பரிசு மழை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 9 93 "ஆளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்; அது அல்ல காரணம்; தொட்டால் ஒட்டிக் கொள்கிறது. பிசின் மாதிரி, "எங்களுக்குப் பதில் சொல்லுங்கள்" என்கிறார்கள்; கை கழுவ முடிவது இல்லை" என்றார். பாதிக்கப்பட்டவர்களையே கேட்டு விடுவது என்று மூவரையும் தனித்தனியே சந்தித்தோம். ஒரே மாதிரியான பதில் கிடைத்தது. அழகும் கவர்ச்சியும் உடைய வாலிபர் அவர் அறிவும் ஆற்றலும் நிரம்பியவர் அவர் செல்வமும் இருக்கிறது. பங்கு போட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. எங்களுக்கு இதில் மனநிறைவே" என்றனர். அவர்கள் சொந்த விஷயம்; அதில் தலையிடுவது தவறு என்று நாம் உணர்ந்தோம். 38. முன்னறிவுப்புத் தேவை அந்த அம்மையார் ஒரு பட்டி மன்றப் பேச்சாளர்; அவரைத் தேடி வந்தவர் சங்கத் தலைவர் ஒருவர்; சங்கீத சபைகள் நடத்தி வந்தார் முன்பு, அவற்றிற்கு இப்பொழுது கூட்டம் சேர்வது இல்லை. தமிழ்க் கூட்டங்களுக்கு நிறைய பேர் திரளுகின்றனர். வெட்டிப் பேச்சும் ஒட்டிப் பேச்சும் மேடைகளை நிரப்பின. டி.வியில் பார்த்துவிட்டு முகவரி தேடி அவர் பெயர் வரியை அந்த அம்மையார் வீட்டில் பார்த்து அழைப்பு மணியை அழுத்தினார். கண்ணகி சிலைபோல் ஒரு கருத்தம்மா வந்து நின்றார். டி.வியில் பார்த்தவர் இங்கே அவரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/95&oldid=806942" இலிருந்து மீள்விக்கப்பட்டது