பக்கம்:பரிசு மழை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. 8 டாக்டர் ரா. சீனிவாசன் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நிறம் மாறி இருந்தது. "அமருங்கள் வருகிறேன்" என்றார். டி.வி. பத்திரிகை வாசிப்போர் போல் புதுப்புடவை உடுத்திக் கொண்டு நிறம் மாறிய பூவாக வந்து காட்சி அளித்தார். "உங்களைப் பார்க்க வந்தோம்” என்றார் வந்தவர். ጨ ă நீங்கள் என்னைப் பார்ப்பதை விரும்பவில்லை. அதனால்தான் உங்களைச் சரியாக வரவேற்காமல் உள்ளே சென்றேன்” என்றார். "விளங்கவில்லையே” என்றார் வந்தவர். 'கலியாணப் பெண்ணை திடும் என்று வந்து பார்ப்பது இல்லை; அவளுக்கு அவகாசம் தேவைப் படுகிறது. முன்னறிவிப்புத் தேவைப்படுகிறது. இது சம்பிரதாயம்" என்றார். யாரையும் பார்ப்பது என்றால் முன்னறிவிப்புத் தேவை என்பதை அவர் அறிந்து கொண்டார். 39. வயது எண்பது அவள் நாட்டியம் கற்றுக் கொண்டிருந்தாள்; சின்ன வயது; அவளை வெளியே சுற்றவிடாமல் பெற்றோர்கள் கையாண்ட முறை இது அவளுக்கு அது நல்ல உடற் பயிற்சியாகவும் இருந்தது. கற்றுக் கொள்ளும் போது யாரையும் அனுமதிப்பது இல்லை; காரணம் "அவள் ஆடுவதை மற்றவர்கள் பார்ப்பதை அவள் விரும்புவது இல்லை" என்றார்கள் முன்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/96&oldid=806943" இலிருந்து மீள்விக்கப்பட்டது