பக்கம்:பரிசு மழை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 95 அவர்கள் பெற்றோர்கள் இப்பொழுது மறுப்புக் கூறவில்லை. "நீங்கள் வந்து பார்க்கலாம்; தடை இல்லை" என்று அவள் தாயார் அறிவித்தார்கள்; இவர் பக்கத்து வீட்டுக் காரர். "நாட்டியம் யார் கற்றுக் கொடுப்பது? ஆசிரியை யார்?" என்று கேட்டார் இவர். "ஆரம்பத்தில் ஒரு அம்மையார் வந்து கொண்டிருந்தார்; நிறுத்தி விட்டோம்." "இப்பொழுது?" “தேர்ச்சி பெற்ற ஆசிரியர்; வயது எண்பது; அவர்தான் சொல்லிக் கொடுக்கிறார்; நீங்கள் வந்து பார்க்கலாம்; தடை இல்லை" என்றார் அந்த அம்மையார். "வேண்டாம்; பெண் வெட்கப் படுவாள்' என்று சொல்லி இவர் போகாமல் நிறுத்திக் கொண்டார். 40. கொடுத்ததை வாங்கிக் கொண்டார் பையன் கொழு கொழு என்று இருந்தான். இந்திய சராசரி எடையை விஞ்சி ஊதிய பலூன் போல இருந்தான். மெலிந்தவர்களையே பார்த்துப் பசந்து விட்ட அவர் கண்கள் இவனைப் பார்த்ததும் அவர் பேச்சுப் பசபசத்தது. "எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாய்?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/97&oldid=806944" இலிருந்து மீள்விக்கப்பட்டது