பக்கம்:பரிசு மழை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 0 டாக்டர் ரா. சீனிவாசன் "அரிசி வாங்குவது இல்லை; எங்கள் நிலத்தில் விளைகிறது" என்றான். "நீ எப்படி இவ்வாறு குண்டு ஆக முடிகிறது?" என்று கேட்டார். 'உண்டு வளர்த்தது இந்த உடம்பு, நன்றாகச் சாப்பிடுவேன்; சாப்பாட்டுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்; எது கேட்டாலும் எங்கப்பா எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்" என்றான். "அவர் என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா" என்ற சும்மா கேட்டு வைத்தார். பையனுக்கு ஆச்சரியம் ஆகிவிட்டது. "இது எப்படித் தெரியும்?" என்று கேட்டான். 'தெரிந்துதான் கூறுகிறேன்; தெரியாமல் கேட்பேனா?” என்று தொடர்ந்தார். "வேறுயாருக்கும் சொல்லி விடாதீர்; எங்க அப்பாவிடம் சொல்கிறேன்; அவர் வேண்டியது தருவார்; கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள்" என்றான். "இவருக்குக் குவியாகி விட்டது; எதிர்பாராத அதிருஷ்டம் அது" என்று மனப்பால் குடித்தார். அவர் அப்பா வீட்டுக்கு வந்தார்; வந்ததும் வராததுமாகக் கோள் மூட்டினான். "அப்பா! நீங்கள் கொடுப்பதை அவர் வாங்கிக் கொள்வார்” என்றான். "அப்படியா" என்று கூறி அவர் அந்த ஆளுக்கு வேண்டியதைக் கொடுத்தார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/98&oldid=806945" இலிருந்து மீள்விக்கப்பட்டது