பக்கம்:பரிசு மழை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 97 அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டார் என்று தெரிகிறது. ஏன் உடனே அவர் மருத்துவரிடம் சென்று கட்டுகள் போட்டுக் கொண்டு வந்தார் என்பது விளங்க வில்லை. அவரைச் சென்று விசாரித்தோம்; அவர் சொன்ன பதில் இதுதான். "பையனுக்கு உடம்பு கொழுப்பு: அவருக்குப் பணக் கொழுப்பு" என்றார். இவருக்கு "வாய்க் கொழுப்பு" என்று சொல்ல வேண்டி நேர்ந்தது. 41. தொழில் நிபுணர் டாக்டர் அவர் ஸ்டெத்தஸ் கோப்பு மாட்டிக் கொண்டு வந்து ஸ்கூட்டரில் இருந்து இறங்கினார். யாரும் அவரை அழைக்கவில்லை; அவரே வந்து விசாரிக்கத் தொடங்கினார். இங்கே யாரும் அவரை அழைத்ததாகத் தெரியவில்லை. "மரம் ஏறுவதற்கு மரம் ஒன்றுக்குப் பத்து ரூபாய்” என்றார். "எங்கள் மரம் உயரம் அதிகம் இல்லையே எளிதில் பறிக்கலாமே” "மட்டையை மாட்டினாலே காசு தரவேண்டும்: உயரம் குள்ளம் அது பற்றி எங்களுக்கு அக்கரை இல்லை" என்றார். பக்கத்து வீட்டுக்காரர் இடையிட்டு நமக்காகப் பரிந்து பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/99&oldid=806946" இலிருந்து மீள்விக்கப்பட்டது