பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| புலியூர்க்கேசிகன் 1. - 7

நாளில் விளங்கின எனலாம். மகேந்திரமலைச் சாரலிலுள்ள நம்பிமலை நம்பியும், வேங்கடமலை வேங்கடவனும், சோலை மலை அழகனும், ம்ற்றும் ப்லரும் இந்தப் பழைய வழி பாட்டு மரபுக்குச் சான்று பகர்கின்றனர். சிறந்த தத்துவச்செய்திகள்,பொருள் நயப்பாடுகள், கனிந்து கனிந்து இனிமையூட்டும் காதற்காட்சிகள், உள்ளத்தைத் தொடுகின்ற ஊடற்பிணக்குகள், பக்திமையூட்டும் சொற்றொடர் கள் எல்லாம். பின்னிப் பிணைந்து, தமிழ் வையையின் தகைசால் நறுநீரைப்போலத் தெளிவும் ஆழமும் அகற்சியும் இனிமையும் கொண்டு, இந்நூற் து. விளங்குகின்றன. இதனை யறிந்து, இதனைக் கற்றுப் பலரும் பயன் பெறல் வேண்டும்; அக்கால நாகரிக நயமறிந்து போற்றவும் வேண்டும். _ _ முதற் பக்தி நூல் - தமிழகத்தில் பிற்காலத்தில் எழுந்த பக்திமை உணர்வுக்கும், அவ்வுணர்வின் பயனாகத் தோன்றிய உளம் பிணிக்கும் ஆழ்வார் நாயன்மார் ஆகியோரின் செழுந்தமிழ்ப் பாசுரங்கட்கும், அவரைப் பின்பற்றி அமைந்த எண்ணற்ற பக்திமை நூற்களுக்கும் முற்பட்டதாக, அவற்றுக்கு வழி காட்டும் ஊற்றாகத் திகழ்வன. இப் பரிபாடற் பாக்கள் எனவும் கூறலாம். தெய்வக் காதல் அகப்பொருள் அமைதியான காதலன் காதலியர் நிலை யையே உயிருக்கும் இறைக்கும் படைத்துக் கொண்டு, இறைமைக் காதலை இனிதாகப் பாடிப் பாடிப் பரவிய திருக்கோவையார் போன்ற பாக்களின் ஏழுச்சிக்கும் இப் பரிபாடலே கால்கோளாக அமைந்தது எனலாம். "காதற்காமம் காமத்துச் சிறந்தது' என்னும் உண்மையின் விளக்கமாக அமைந்த பாடல், வடபுல தென்புல மரபுகள் இரண்டையும் சீர்தூக்கி ஆராய்ந்து, அவற்றுள் தென்புல மரபே சிறந்ததாதலைத் தெளிவாகவும் திட்பமாகவும் இனிமையாகவும் விளக்குவதனையும் பார்க்கின்றோம். பன்முறை கற்றுக் கற்றுப் பொருளுணர்ந்து மனங்கொள்ள வேண்டிய பாடல் ஒன்பதாம் பாடலாகிய அதுவாகும். - தென்னவர் வழிபாட்டு மரபிலே பண்ணோடு பாடிப் பரவிப் பரவிப் பரம்பொருளை வழிபட்டுப் பயனடையும் நாத உபாசனை'யின் கால்கோளாகவும் இப் பாட்டுக்களைக் கொள்ளலாம். உள்ளம் கசிந்து கனிந்து கரைந்து பரமான்மா வோடு இணைந்து மணக்கும் ஆனந்தநிலை இந்த உபாசனை.

|