பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * ഞഖങ്ങധ (22) 209 கருவிகள், நீர் விளையாடற்குப் பொருத்தமான அணிகள், அழகிய துகில்கள் ஆகிய இவற்றை எல்லாம் நல்லனவாகவும் பலவாகவும் எடுத்துக்கொண்டு, மக்கள் ஆற்றை நோக்கிச் செல்வாராயினர். செல்லும் மக்களுக்குப் பணிபுரியும் பிறபிற தொழிலினரும் அவர் பின்னாகத் தொடர்ந்து சென்றனர். செறிந்த செய்தொழில் நலத்தால் அழகுற விளங்கிய சிவந்த பூக்கள் பொருந்திய கண்ணியராக ஆடவர் விளங்கினர். குளிர்ச்சி பொருந்திய வெட்சிப் பூவிதழால் தொடுக்கப்பெற்ற கோதை யினராக மகளிர் விளங்கினர். மாலையணிந் தோராகவும் முடிபுனைந்தோராகவும், தகைபொருந்திய மார்பினராகவும் ஆடவரும் மகளிரும் விளங்கினர். குதிரைகளும், களிறுகளும், ம்ணிகள்ணிந்த கோவேறு கழுதைகளும் ஆகிய, இவர்கள் ஊர்ந்துவந்தன பலவும், ஆற்றங்கரைச் சோலைப் புறங்களில் நிறைந்தன. மக்களும் ஆற்றின் கரையே நெரியுமாறு மிகுதியாக வந்து கூடித் திரண்டனர். . . சொற்பொருள்:துவர் துவர்ப்பொருள்கள்: இவை நீர்க்கு நிறமும் மணமும் தருவன. புகை புகைத்தற்குரிய அகில் முதலியன. பூந்துகில் அழகிய மெல்லிய ஆடை ஈர் அமை - குளிர்ச்சி பொருந்திய தகை - அழகு நெரிபு - நெரிய, . ... " சேர்கின்ற கவின் வேலாற்று மொய்ம்பனின் விரைமலர் அம்பினோன் போலாற்று முன்பின் புனைகழல் மைந்தரொடு தாரணி மைந்தர் தவப்பயன் சான்மெனக், காரணி கூந்தல் கயற்கண் கவிரிதழ் - - வாரணி கொம்மை வகையமை மேகலை 30 ஏரணி இலங்கெயிற் றின்னகை யவர் . சீரணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன் நீரணி நீத்தம்இவர்க்கணி கொல்லெனாத் தேருநர் தேருங்கால் தேர்தற் களிதுகாண்; தீரமும் வையையும் சேர்கின்ற கண்கவின், 35 வேலாற் போரிடலையுடைய வலிமை வாய்ந்த முருகனைப் போன்ற போர்செய்யும் வன்மையும், அழகிய வீரக்கழலும் உடைய மைந்தரோடு, மணமலர்களையே அம்புகளாகக் கொண் டோனாகிய மன்மதனைப்போல மாலையணிந்து அழகுற விளங்கும் மைந்தரும் திரண்டு வந்தனர். அவர்களைக் காணலே தம் தவப்பயன் எனக் கண்டோர் கருதினர். - - மேகத்தையொத்த அழகிய கருங்கூந்தலையும், கயலர் மீனைப் போன்ற நெடிய கண்களையும், செம்முருக்கின் இதழை யொத்த இதழ்களையும், கச்சணிந்த அழகிய மார்பகங்களையும், .يمي