பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 - பரிபாடல் மூலமும் உரையும் சொற்பொருள் : வண்தொடை - வளவிய நரம்பின் தொடர்ச்சி. விண்ட வாய்திறந்து பிளிறிய தண்டா - நீங்காத, இருமுழவு - பெரிய முழவு, அரி - செவ்வரி. புரி - விருப்பம். காமம் இச்சை. பூ - அழகிய, - . விளக்கம் : இன்னொலியும், பாடலும் ஆடலும் அங்கிருந் தார் மனத்துத் துன்பங்களைப் போக்கி, அவரைக் காம விருப் பினராகச் செய்தன என்க. அத்தகைய களிப்பும் செழிப்பும் அங்கே விளங்கிற்று என்றும் கொள்ளுக. குளவாய் அமர்ந்தான் மணிமருள் தகைவகை நெடுசெறி யொலிபொலி அவிர்நிமிர் புகழ்கூந்தற் 60 பிணிநெகிழ் துணையினை தெளியொளி திகழ்ஞெகிழ் தெரியரி மதுமகிழ்பு அரிமலர் மகிழுண்கண் வாணுதலோர் மணிமயில் தொழிலெழில் இகன்மலி திகழ்பிறி திகழ்கடுங் கடாக்களிற்று அண்ண லவரொடு அணிமிக வந்திறைஞ்ச அல்லிகப்பப் பிணிநீங்க - நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் வரைவாய் தழுவிய கல்;சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர்;

- (இது முடுகிய்ல்) நீலமணி போலக் கருமையுடன் விளங்குவதும், சிறப் பினையுடையதும், ஐவகையாக முடிக்கப் பெறுவதும், நெருங்கிய நெறிப்பினைக் கொண்டதும், தழைத்தும் பொலிவு பெற்றும் விளங்குவதும், ஒளிவீசுவதுமான சிறந்த புகழையுடைய கூந்தலை யுடையவர்; - - - கட்டு நெகிழ்ந்ததும், இணையொத்ததும், தெளிந்த ஒளியோடு திகழ்வதுமான சிலம்புகளை உடையவர்; அய்ந்தும், வடிகட்டியும் விளங்கும் கள்ளை உண்டு மகிழ் பவர் செவ்வரிபடர்ந்த தாமரை மலரைப்போலும் களிவெறியாற் சிவந்த மையுண்ட கண்களைக் கொண்டவர்; ஒளிவீசும் நெற்றி யினரான மகளிர். இவர்கள் ஆதிசேடனின் கோயிலுக்கு வந்த படியேயிருந்தனர். நீலமணியனைய தோகையினைக் கொண்ட மயிலினது சாயலோடும், தம் எழிலால் மாறுபட்டு, அவற்றிலும் மிக்க எழிலோடு திகழ்ந்தவராக, அம் மகளிர் அசைந்தசைந்து ஒயிலோடு நடந்து வந்தனர். அவர்கள் அக்கோயிலிடமெங்கணும் பரந்து பரவி நிறைந்து நின்றனர். அவர்களோடு, விளங்கும் மிக்க மதத்தைக் கொண்ட களிற்றைப் போலத் திழும் தலைமைப் பாட்டை உடையவரான, அவரவர்க்குரிய காதலரும் வந்து சேர்ந்து எங்கனும் பரந்திருந்தனர். -