பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பரிபாடல் epoogpub உரையும் ஒளிதிகழும் பாற்கடலினைக் கடைந்த அந்தக் காலத்திலே, மந்தர மலையாகிய மத்தானது கடலுள் ஆழத் தொடங்கிற்று. திருமால் ஆமையுருக்கொண்டு அதனை ஆழவிடாது தடுத்து, மேலே எடுத்துக் கொணர்ந்து, தன் சிறப்புடைய முதுகின் மேல் தாங்கியபடி அதனை நிலைநிற்கச் செய்தான். மகர மீன்கள் உலாவும் கடலிடத்தே அவ்வாறு மலையினை நிலைபெற வைத்து நிறுத்தினான். புகழ் நிரம்பியசிறப்பினையுடைய தேவரும் அசுரருமாகிய இருதிறத்தார்க்கும் அமுதம் கடைவதற்கு உதவினான். அக்காலத்தே, இருபக்கத்தும் நின்று இழுத்துக் கடைவார்க்கு உதவியான கயிறாக அமைந்து அம்மலையினைச் சூழ்ந்து கிடந்தவன் ஆதிசேடன். இருவடத்தையும் இருசாராரும் பற்றிக் கடலைக் கடைந்தனர். அவ்வேளையிற் சக்கரப் படையினனான திருமால் இருபுறத்தும் மிகவும் நீண்டு கிடந்த பெருவிடமாகத் திகழ்ந்த சேடனாகிய கயிற்றைப் பற்றிக் கடையுமாறு அருள்செய்தான். தோழம் என்னும் பேரெண் ணைக் கொண்ட காலமளவும், அவர்கள் கெடாத வலிமையோடு இழுத்துக் கடையவும், தான் அறுபடாது அழகுறத் திகழ்ந்தவனும் சேடனாகிய பெருமானே யாவன். மிக்க வலிமையுடையவனாகிய காற்றுத் தேவனுடைய மேலான வலிமையெல்லாம் செல்லுபடியாகாதபடி, அந்நாளில், அவனுக்கு எதிராக நின்று மேருமலையினைத் தன் ஆயிரம் படங்களையும் விரித்து அணைத்து நின்று காத்தருளியவனும் ஆதிசேடனே யாவான். - நீலமணியைப் போன்ற பெருமலைகளையுடைய இவ்வுல கத்தைத் தன் முடியிடத்தே விளங்கும் ஓர் அணிகலத்தைப் போலப் பேணித் தாங்கி நிற்போனும் சேடனே யாவான். எவர்க்கும் பணிதலற்ற சிறப்பினைக் கொண்டவனும், செல்லும் வாகனமாக ஆனேற்றைக் கொண்டவனுமாகியவன் சிவபெருமான். அவன் திரிபுரத்தோடு சினந்து, அதனையழிக்கச் சென்ற அக்காலத்திலே, மலைகளுள் உயர்ந்த உச்சியினைக் கொண்ட இமயமாகிய வில்லிற்குப் பொருந்திய நாணாகி, தொன்மை வாய்ந்த புகழைத்தந்தவனும் சேடனே யாவான். சொள்பொருள் : முந்நீர்- கடல் எழ வாங்கி-மேலே எடுத்து. சிரம் - ஈண்டு முதுகை உணர்த்தும் திகழ்பு - திகழ. மகரம் சுறாமீன். மறி உலாவும். இரு வடம் - பெரிதான வடக் கயிறு: பெருங்கயிற்றை வடம் என்பது மரபு.ஆழியான்-திருமால். உகாஅ - கெடாத ஞாறிய தோன்றிய, ஞாலம் - உலகம். விடை - எருது. செற்றுழி - அழிக்கச் சினந்த விடற்று. -