பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பரிபாடல் மூலமும் உரையும் புகுமள வளவியலிசை சிறைதணிவின்று வெள்ளமிகை! வரைபல புரைஉயிர் கயிறணி பயில்தொழில் மணியணி! யானைமிசை மைந்தரும் மடவாரும் நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று 70 குருமணி யானை இயல்தேர்ப் பொருநன் திருமருத முன்துறை முற்றம் குறுகித் தெரிமருதம்ப பாடுப பிணிகொள் யாழ்ப்பாணர், புதுப்புனலானது மிக விரைவாகவும், இரைச்சலோடும், எங்கும் பரவுயபடியும், துறைகளையும் கரைகளையும் அழித்த படியும் பள்ளத்தை நோக்கிச் செல்லும், கரையோரப் பகுதி யினும், கடலிடத்துச் சென்று கலக்குமிடத்தும், தான் பிறந்த சையமலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட தான் வருகின்ற வழியிடத்தும், புதுப்புனலானது வரிசை வரிசையாக நுரைகளை எழுப்பிக்கொண்டே செல்லும். - நுரையோடு மதகுதோறும் இறங்கிச் செல்லும் புன லானது கரைமேலும் புரண்டுசெல்லும். அலை மடங்குகின்ற கடலிடத்தே சென்று சேருமளவும், மிக்க வெள்ளம் மேலும் மேலும் வந்துவந்து சேர்தலால், கரைகளாகிய சிறைக்குள் அடங்காதாய்க் கரைபுரண்டவாறே வெள்ளம் மிகுதியாகப் பெருகிச் செல்லும். பல மலைகளைப் போலும் உயர்ந்தனவும், கழுத்தே கயிறு கட்டப்பெற்றனவும், தமக்குப் பயிற்றுவிக்கப் பெற்ற தொழில் களிற் பழகியவுமாகிய, மணியணிந்த யானைகளின் மேலமர்ந்த ' வராக மைந்தரும், மடவாரும், நிரை நிரையாக நீர்வரத்தை அறிந்தவுடனே, விரைந்து சென்று வையைத் துறைகளிற் கூடினார்கள். - - நிறமமைந்த மணியையுடைய யானையையும், இயலமைந்த தேரினையும் உடையவன் பாண்டியன். அவனும் திருமருத முன்துறை முற்றத்தே அடைந்தான். அவனைக் கண்டதும். நரம்புகள் கட்டப்பெற்ற யாழினையுடையவராகிய பாணர்கள், மருதப்பண்ணினை ஆய்ந்தெடுத்து இசைத்தனர்; வாய்ப் பாட்டாகப் பாடவும் தொடங்கினர். - சொற்பொருள் : இரை இரைச்சலுடன். விரை விரைபு மிகவும் விரைவாக புரளிய புரண்டுபோமாறு, மறி - மடங்குகின்ற, பயில் தொழில் - பயில்தற்குரிய தொழில். இயல்தேர் - செலற்குரிய தேர். குருமணி நிறமமைந்த மணி குழி இயினர் - திரண்டனர். பிணி - நரம்பின் கட்டு. +