பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| - புலியூர்க்கேசிகன் * திருமால் வாழ்த்து (2) - 23 - கொண்டு போதலாகிய அச் செயலினும், புகழ்பொருந்த - இசைக்கும் மறைவிதிகளின்படியே யாகத்தியை முறையாக மூட்டி, அது சுடரிட்டு எரியுங்காலத்தே, ஒள்ளிய அச்சுடரிடத்தே காணப்படும் வளமைப்பாட்டினை ஏற்றுக் கொள்ளுவதிலும், நின் உருவத்தோடு, நின் உணர்வையும், பிறரும் கண்டு போற்றி ஏற்றுக் கொள்வர். நின்னோடு கூடிய புகழ்மைக்குத் தக்கவாறு, அந்தணர் போற்றிக் காண்கின்ற நின்னுடைய வருகை இவ்வாறேயாகும், பெருமானே! - - - சொற்பொருள்: கேள்வி-வேதங்களைக் கேட்டறிந்த அறிவு. ஆசான் - ஆசிரியன்: வேள்வித்தலைவன்.ஆடு -யாகப் பலியாகிய ஆடு; இதனையாகத் தூணில் கட்டி வைப்பர். கனல் - வேள்வித் தீ விளக்கம் : திருமால் சாதாரண மக்கட்குச் சிலைவடிவாக வும், அந்தணர்க்கு வேள்வித்திச் சுடரிடையிலும், யோகிகட்கு அவர் உள்ளத்திலும், சித்தர்களுக்கு எங்கும் எதனிடத்துமாகவும் காட்சியளிப்பான் என்ற உண்மையை உரைத்ததாம். எம் அறிவு துன்புறாதிருக்க வாயடை அமிர்தம் நின் மனத்தகத் தடைத்தர - மூவா மரபும் ஒவா நோன்மையும் 70 சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் - - - " * в д, а е в в ё в а в a ё в а в ...............மரபினோய் நின்னடி தலையுற வணங்கினேம் பன்மாண் கலியில் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் 75 கொடும்பாடு அறியற்க எம்மறி வெனவே! - - நின் மனத்துள்ளே, தேவர்கட்கு அமுதத்தைத் தருதற்கு நீதான் நினைத்தனை அவ்வளவிலே அமுதம் அவர்கள் வாயினைச் சென்றும் அடைந்தது. அவர்கள் முதுமையற்ற தன்மையையும், தொலைவற்ற வலிமையையும் பெற்றனர். சாதல் அற்ற தன்மை யையும் அவர்கள் அடைந்தனர். இவ்வாறு, அமரர் பொருட் டாகச் சென்ற நின் அருண்மை வியத்தற்குரியது. இத்தகு நன்மை கொண்டோய்! நின் திருவடிகளைத் தலைபொருந்த யாமும் வணங்கினேம் கலக்கமற்ற நெஞ்சினேமாய், நின் பல புகழையும் சொல்லி நின்னைப் போற்றினேம்; நின் திருவடிகளை வாழ்த்தினேம். எதற்காக? . . எம் அறிவானது கொடுமையான தன்மை எதனையும் அறியாதிருக்குமாறு அருள்வாயாக என்பதற்காகவே இதனை விரும்பியே எம்பல்வகைச் சுற்றத்தோடும் நின்னைப் போற்றுகின் றேம் எமக்கும் கருணைபாலித்து அருளிச் செய்வாயாக!