பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - பரிபாடல் மூலமும் உரையும் சொற்பொருள் : திணி நிலம் அணுச் செறிவால் அமைந்த நிலம், அயர்ந்து - சோர்ந்து அகன்று உலகைவிட்டு நீங்கி, பிணி கட்டு நெகிழ்பு தளர்ந்து. அன்னவர் - அவுணர். வகை முறைமை. - - - - - - விளக்கம் : நினக்கு அஞ்சியவர் தாமே கடலுட் பாய்ந்து மாண்டனர்; எஞ்சியோர் நின்னைப் பணிந்து உயிர் பிழைத்தனர். நீயோ மாண்டோர், எஞ்சியோர் ஆகிய அனைவருக்குமே முதல்வனாக இருப்பவன். இதனை அறியாமையாலேயே சிலர் நின்னைப் பகைவனெனக் கொண்டு மாய்ந்தனர் என்பதாம். தன்மை அறிந்தோம்! ஆயிர அணர்தலை அரவுவாய்க் கொண்ட சேவல் ஊர்தியும் செங்கண் மாஅல் 60 ஓவெனக் கிளக்கும் கால முதல்வனை! 'ஏஎ’ எனக் கிளத்தலின் இனைமைநற்கு அறிந்தனம்; படம் எடுத்து உயர்த்த அயிரம் தலைகளைக் கொண்டவன் ஆதிசேடனாகிய பாம்பு, அதனைத் தன் வாயிற் கெளவிக் கொண்டிருப்பவன் கருடச் சேவலாகிய நின் ஊர்தி. அவனும், ஒருசமயம், ஊன்றிய நின் விரலின் அழுத்தத்தைத் தாங்கானா யினான். செங்க்ண் மாலே! என்னைக் காத்தருள்க’ எனக் கூறிய வனாக,ஒ வெனக் குரலெழுப்பியும் கதறினான். அத்தகைய ஆற்ற லுடையவன், காலங்களைக் கடந்து நிற்கும் முதல்வன், நீயாவாய்! சாமவேதம் ஏஎ என நின்னைப் பற்றி எடுத்துக் கூறுதலின், நின் தன்மைகள்ை யாமும் அறிந்தோம். அதனையே யாமும் கூறுகின்றோம். - - - சொற்பொருள் : அணர்தலை உயர்ந்து அசைந்தபடி இருக்கும் தலைகள். சேவல் கருடச் சேவல் கால முதல்வன். காலங்களைக் கடந்து நிற்கும் முதல்வன். - நீயே எல்லாம்: தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ! - ஆறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்த நீ 65 வேதத்து மறை நீ! பூதத்து முதலும் நீ! - வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ! அனைத்தும் நீ! அனைத்தின் உட்பொருளும் நீ! உறைவும் உறைவதும் இலையே உண்மையும் மறவியில் சிறப்பின் மாயமார் அனையை! 70 முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே!