பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - - பரிபாடல் மூலமும் உரையும் - செய்யப்படும் மெய்ப்பொருள்; இவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன. அரணம் - காவல். . - விளக்கம் : திருமால் கோயில் கொண்டிருக்கும் இடங்களைக் கூறி, அவ்விடத்தும், மற்றும் எவ்விடத்தும், அன்பர் மனத்தகத்தும் பொருந்தியிருப்பவனும் அவனே என்கின்றனர். அவன் அன்பர்க்கு ஏவலனும் காவலனும் ஆகின்ற அந்தக் கிருபாகர நிலையையும் உரைத்துப் போற்றுகின்றனர். - ஐந்தாம் பாடல் செவ்வேள் (5) பாடியவர் : கடுவன் இளவெயினனார்; பண் வகுத்தவர் : கண்ணனாகனார்; பண் : பாலையாழ். - 1. வெற்றி வேல் பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கித் தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய் 5 கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல் - மாயப் போரில் வல்லவர் அவுணர். அவர்கள் ஆற்றிய போர்களுள் எல்லாம் அவர்களே வெற்றி பெற்று வந்தனர். அதனால், வென்றியின் மக்கள்' - வெற்றியே பெறுகின்ற புண்ணியப் பயனைக்கொண்ட மக்கள் - என்று பலரும் அவரைக் கருதினர். ஒன்றுபட்டு அவரைப் போற்றியும் வந்தனர். இத்தகைய பெரும் புகழைப் பெற்றவர் அவுணர்கள். அவர்கள் எவ்வகைப்பட்ட உயிரையும் கொன்று போக்கி, அதனுடலைத் தின்பதற்குத் துணிந்தவர்கள்; எத்தகையவொரு கொடிய செயலையும் பழிபாவத்திற்கு அஞ்சாராய்ச் செய்பவர் கள்; எதிர்த்தாரைக் கொல்லும் பண்பினர்கள் - அவர்களை மன்னிக்கும் இயல்பற்றவர்கள்.இத்தகையோராகிய அவுணர் தம் சுற்றமே அற்றுப்போகும்படியாக, முற்றவும் அவர்களை அழித்த சிறப்புடையது நின் கை வேல்! பரந்ததும், குளிர்ச்சியுடையதுமான, கடலிடத்தே சென்று, அவுணர் கோமானாகிய சூரன் நினக்கஞ்சி ஒளிந்து கொண்டான். அவனைக் கொல்லக் கருதிய நீதான், மிகவுயர்ந்த பிணிமுகம் என்றும் போர்க் களிற்றினை ஊர்ந்தவனாகப், பாரெல்லாம் துகள்படும்படியாக, அவனை நோக்கிச் சென்றனை. அவனோடு கடும்போர் செய்தனை. தீயின் கொழுந்து அக் கடலையே வற்றச்