பக்கம்:பருவ மழை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ.வி. எம். இனிது வாழ்க! திரை உலகில் தான்பெற்ற அனுபவத்தைத் தித்திக்கும் சுவைததும்பக் குமுதம் ஏட்டில் உரை கடையாய் ஏ.வி. எம். தொடர்ந்து முன்னே உயிர்த் துடிப்போ(டு) எழுதிவந்த(து) அனைத்தும் சேர்த்து வரைகடந்த வண்ணஇலக் கியமாய்ச் செய்து 'வானதி ஏ. திருநாவுக் கரசு தந்தார்! கரைகடந்த ஆர்வம்மிகும் அன்ன ருக்கென் கலையுலகம் என்றென்றும் நன்றிகூறும்! பொய்யப்பர் மிகும்சினிமாத் துறையில் வந்த பொருளப்பர் யாரேனும் மீண்ட துண்டா? ஐயப்பராகி மற்ருேர் சொல்லைக் கேட்டும், அடுத்தடுத்துத் தோல்விகண்டும், கடன்வாய்ப்பட்டும் உய்யப்பராவதற்கு வகைகானது ஒடப்பரானவர்கள் பல்லோர்! ஏ.வி. மெய்யப்பர் இவர்க்கிணையாய் வெற்றிகண்ட மேலப்பர் உண்டு என்று யாரைச்சொல்வேன்? குறிப்பு : “எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற தலைப் பில் திரு. ஏ. வி. எம். அவர்கள் எழுதிய நூலே வானதி பதிப்பகம் வெளியிட்டபோது வழங்கிய வாழ்த்துக் கவிதை. 170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/184&oldid=807428" இலிருந்து மீள்விக்கப்பட்டது