பக்கம்:பருவ மழை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லட்சம்லட்சமாய்க்கொட்டிக் கொடுத்து விட்டு லச்சைகெட்டு ஸ்டார்’களின்பின் கையைக் கட்டிப் பிச்சையெனக் கால்விட்டு'க் கேட்டு ஏங்கும் பித்தர்கள்போல் ஏ.வி.எம். அலைவ தில்லை நிச்சயமாய் மக்கள்மனம் தன்னை ஈர்த்து நிகரற்ற வெற்றிதரும் கதையைத் தேர்ந்து கச்சிதமாய்ப் புதுமுகங்கள் சிலரைச் சேர்த்துக் கலைத்துறையில் வெற்றி காணும் கர்ம வீரர்! அடலேறு போன்ற தமிழ் மறவர் கூட்டம் அணி அணியாய்த் தமிழ்வேந்தர் தலைமை யின்கீழ் வடகாட்டின் மீதுபடை யெடுத்துச் சென்ற வரலாறு கண்டதுண்டு ஆல்ை இன்று படமாடும்:வடகாட்டுத் திரைக ளெங்கும் படையெடுத்துப் பலமுறையும் வெற்றி கண்ட திடமான உரம்படைத்த ஏ.வி.எம்.மின் திறமைக்கு யாரை இங்கே உவமை சொல்வேன்? படத்துறையில் ஏ.வி. எம். செட்டி யார்போல் பதிப்பகத்துத் துறையினிலே தமிழ கத்தில் இடம்பிடித்துக் கொண்டவருள்; வான திக்கு இணையாக இன்றெவரைச் சொல்லக் கூடும்: திடமனத்தில் ஏ.வி. எம். செட்டி யாரும் திருநாவுக் கரசும்ஒன்றே; என்றுசொல்வேன்! படத்துறையில் அவர்க்குஇணை அவரே என்ருல்; பதிப்பகத்தில் இவர்க்குஇணை இவரே என்பேன்! 171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/185&oldid=807430" இலிருந்து மீள்விக்கப்பட்டது