பக்கம்:பருவ மழை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைமுகட்டின் மாரி தன்னை ஆற்றில் வாங்கி வகைப்படுத்திக் கால்வாய்கள் வழியே பாய்ச்சி கிலமனைத்தும் பண்படுத்திப் பயிர்கொ ழிக்கும் நெல்லுக்கு மட்டுமின்றிப் புல்லி னுக்கும் பலனளிக்கும் பான்மையைப்போல் காட்டின் செல்வம் பல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கப் பரிவு கொண்டு கலன்விளக்கும் நெறிமுறைகள் உபதே சித்த ஞானியென்னும் மகாவீரர் நாமம் வாழ்க! வள்ளுவனர் கம்பர்ஒளவை இளங்கோ மற்றும் வரகவிபாரதி வரைக்கும்; அதற்குப் பின்னும் தெள்ளுதமிழ் நீதி நெறி விளக்கும் நூல்கள் செம்மையெல்லாம் ஏட்டிலின்றி நாட்டில் காணுேம்! கொள்ளையர்கள் சிலர் இங்கே குபேர ராகக் கோடானுகோடி பேரை வறுமைச் சேற்றில் தள்ளுவதைத் தடுப்பதற்கும் மகாவீ ரர்தம் தத்துவத்தைப் பரப்பிடும்ாற் சபதம் ஏற்போம்! கடத்தல்களும், கலப்படமும், கள்ளச் சந்தைக் கயமைகளும், பண்டத்தைப் பதுக்கி வைத்து இடைத் தாக ராய்இருந்து விலையை ஏற்றி எல்லை யற்றுக் கொள்ளையிடும் இழிவும், மற்றும் படித்தவர்கள், அரசியலார், பணம் படைத்தோர் பாமரர்கள் தொழிலாளர் உழவர் தம்மைப் படுத்திவரும் கொடுமையெல்லாம் மகாவீ ரர்தம் பயனுள்ள போதனைகள் மாற்றக் கூடும்! 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/285&oldid=807705" இலிருந்து மீள்விக்கப்பட்டது