பக்கம்:பருவ மழை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பை மேட்டில் வீசுகின்ற எச்சி இலக்கும் குக்கலுடன் போர் தெர்டுக்கும் எளியோர் ஓர்பால்-! உப்பரிக்கை மேலிருந்து சுக்போ கத்தில் . உல்லாசம் அனுபவிக்கும் செல்வர் ஓர்பால்இப்படிஇங்கிருக்கின்ற ஏற்றத் தாழ்வை எத்தனைநாள் பொறுத்திருப்பார் ஏழை மக்கள்? ஒப்பரிய மகாவீரர் உபதே சித்த உயர்நெறியால் சமுதாய மாற்றம் காண்போம்! ஏழைகள் பால் இரக்கத்தால் பண்டு இங்கே எழுந்தருளிப் போந்த மகா வீர ரைப்போல் வாழையடி வாழையென இந்த நாட்டில் வந்துதித்த மகான்களெல்லாம் வகுத்த ஞானப் பேழையெனும் நீதிநெறிப் பொக்கி ஷத்தைப் பெரிதும் நாம் புறக்கணித்தோம்! மறந்தோம்; அந்தப் பீழையெல்லாம் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டிப் பெற்ற சுதந்திரம் தன்னைப் பேணிக்காப்போம்! அரசுரிமை அந்தஸ்த்துச் சுகபோ கங்கள் அத்தனையும் அகித்யமென்று துறவு பூண்டு கிரந்தரமும் திகம்பரராய் காடு முற்றும் நெடும்பயணம் தொடர்ந்து ஜைன மதம் பரப்பும் குரவர்களில் ஒருவரென வந்து தித்தக் குருமணியாம் மகாவீரர் பெருமை தன்னை முரசறைந்து வாயாரப் புகழ்ந்து வாழ்த்தி முடிதாழ்த்திப் போற்றிடுவோம்! வணக்கம்! நன்றி மகாவீரர்.2500ம் ஆண்டு விழா சென்னை வானெ லிச் சிறப்புக் கவியரங்கம் 13-11-15 卿 276

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/286&oldid=807706" இலிருந்து மீள்விக்கப்பட்டது