பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னச் சின்னச் செய்திகள்

67


இரங்கூன் தியேட்டர் ஒன்றில் முப்பரிமாணப் படம் (Three Dimension) ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உருவங்களை நேரில் பார்ப்பது போல் அமைந்துள்ளது பற்றி பெரியாரிடம் கூறினோம்.

அதைப் பார்க்கவேண்டும் என்றார் பெரியார், மறு நாள் பதிவு செய்து அழைத்துச் சென்றோம்.

விஞ்ஞான முன்னேற்றம் கண்டு அதிசயப்பட்டார்.

சினிமாப் பார்க்கக் கூடாதென்று சொன்ன நீங்கள் நேற்று சினிமாப் பார்க்கப் போனீர்களே? சரி தானா? என்று ஒருவர் கேட்டார்.

பெரியார் அமைதியாகப் பதில் சொன்னார். காதல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, புராணம், மூடபக்தி என்று சினிமாப் படம் பிடிப்பதால் பார்க்கக்கூடாது என்கிறேன்.

விஞ்ஞான முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு சினிமா பயன்படுத்தப்படவேண்டும். அப்போது எல்லாரும் சினிமாப் பார்க்கலாம்.

அந்த நண்பர் உண்மையான ஞானம் பெற்றவரானார்.

***

"இருக்கின்ற மதங்களிலே புத்தமதம் சிறந்ததாகத் தெரிகின்றது. நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டார் பெரியார்.

" புத்தர் தோற்றுவித்த புத்த சங்கம் மிகச் சிறந்ததுதான். ஆனால் இன்றுள்ள புத்தமதம் தெய்வநம்பிக்கையில்லாத புத்தரையே தெய்வமாக்கிவிட்டது. புத்தர் எதுஎது