பக்கம்:பர்மா ரமணி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னத்தில் அறை ! . 109 அவன் ரமணியாகத்தான் இருக்கவேண்டும். ೧7, உடனே போவோம். அவனைக் கேட்டுப் பார்ப்போம்: என்று பரபரப்போடு சொன்னன் ஆனந்தன். . குண்டுமணியும் பைனுகுலரை வாங்கி அதன் உதவியால் அந்தப் பையனைக் கூர்ந்து பார்த்தான். பார்த்துவிட்டு, 'இருக்கும்,இருக்கும்.ரமணியாகத்தான் இருக்கும். ஆலுைம், நாம் உடனே அவனிடம் போய்க் கேட்கக் கூடாது. அவன் எங்கே போகிருன், என்ன செய்கிருன் என்று மெதுவாய்க் கவனிக்க வேண்டும்" என்ருன். இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பையன் படிகளில் ஏறி மேலே போக ஆரம்பித்து விட்டான். அந்தப் பையன் படிகளில் ஏறிச்செல்வதைப் பார்த் ததும், டேய், டேய் ! அவன் மேலே போகிருனேடா! சீக்கிரம் வாடா.காமும் அவன் பின்னுலேயே போவோம்: என்று கூறினன் ஆனந்தன். இருவரும் அவனைப் பின் தொடர்ந்து சென்ருர்கள். படிகளில் ஏறிச் செல்லும் போது, பாவம், குண்டுமணி வெகு சிரமப்பட்டான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. யானை கட்டும் மண்டபத் துக்குப் பக்கத்தில் வந்ததும், அப்பாடா! என்று தொந்திக் கணபதி போல் தொப்'பென்று உட்கார்ந்து விட்டான் குண்டுமணி ! ஆனந்தனுக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. என்னடா குண்டுமணி, சமயம் தெரியாமல் இப்படி உட்கார்ந்து விட்டாயே! அவனைப் பின் தொடர்ந்து போக வேண்டாமா?’ என்ருன். z . 1501–8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/113&oldid=807840" இலிருந்து மீள்விக்கப்பட்டது