பக்கம்:பர்மா ரமணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f £4 பர்மா ரமணி மூன்று காட்களாக உன்னைத் தேடித் தேடி அலுத்துப் போனுேம். பத்து நாட்களுக்கு முன்பு நாடகக் கொட்ட கையிலே நீ பட்டுத் துணியைத் திருடிவிட்டாய் என்று தானே முதலாளி உன்னைப் பிடித்து வெளியே தள்ளி ஞர் ? அதற்குப் பிறகு...” -ஆனந்தன் முழுவதையும் கூறி முடிக்கவில்லை. அதற்குள் பட்டென்று பலமாக ஓர் அறை விழுந்தது அவன் கன்னத்திலே! ஆனந்தனுக்கு அறை கொடுத் தது வேறு யாருமல்ல; அந்தப் புதுப் பையனேதான் ஆனந்தனுக்கு அறை விழுந்ததும், குண்டுமணி தனது கன்னங்கள் இரண்டையும் கைகளால் மறைத் துக்கொண்டு எடுத்தான் ஓட்டம்: குடு குடு என்று கீழே ஒடி வந்துவிட்டான். திரும்பியே பார்க்கவில்லை! மலேக்கோட்டை வாசலில் உள்ள பூக்கடைகளுக்குப் பக்கத்திலே வந்து கின்ற பிறகுதான் அவன் திரும்பிப் பார்த்தான்! ஆனந்தனுக்கு அறை கொடுத்துவிட்டு, டேய் அயோக்கியப் பயலே! என்னைத் திருடனென்ரு சொல் கிருய் ? பட்டுத் துணியாம்; பேணுவாம். நான் திருடி னேனும்! என்னடா உளறுகிருய் !" என்று சீறின்ை அந்தப் பையன். "ஐயையோ முழுவதையும் கேளேன். அதற்குள் அவசரப்படுகிருயே என்று கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டே கூறினன் ஆனந்தன். 'உன் பேச்சைக் கேட்கத் தேவை இல்லை. பாதாம் அல்வா, பாசக்தி எல்லாம் வாங்கித் தருவதாகச் சொன்னதைக் கேட்டதும், நான்தான் ரமணி என்று கூறி உங்களை நான் ஏமாற்ற நினைத்தேன். ஆனல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/118&oldid=807845" இலிருந்து மீள்விக்கப்பட்டது