பக்கம்:பர்மா ரமணி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னத்தில் அறை ! 113 கல்ல காலம், பிள்ளையார் கருணை வைத்தார்; நீயும் கிடைத்தாய், இப்போதே நீ கிடைத்துவிட்டதாக மாமாவுக்குத் தந்தி அடிக்கப் போகிறேன்” என்ருன் தந்தி அடிக்கிறதெல்லாம் பிறகு பார்த்துக் கொள் ளலாம். முதலிலே போய், வயிறு கிறையச் சாப்பிடு வோம், வா’ என்ருன் குண்டுமணி. . அப்போது அந்தப் பையன், நீங்கள் பலே பையன் களாக இருக்கிறீர்களே! அடையாளத்தை வைத்தே கண்டுபிடித்து விட்டீர்களே ! உன் மாமா கடிதம் எழுதியிருந்தாரா? எழுதியிருப்பார்; எழுதியிருப்பார்” என்ருன். 'தம்பி, எங்களை சாமானியமாக நினைத்துவிடாதே! அந்த ஆனந்தன் ஒரு துப்பறியும் புலி. இந்தக் குண்டு மணி ஒரு துப்பறியும் சிங்கம். நமது சினிமாக்களிலே வருகிருர்களே, துப்பறியும் சிங்கங்களும் புலிகளும், அவர்களெல்லாம் எங்களிடத்திலே பிச்சை வாங்க வேண்டும்!” என்று கூறினன் குண்டுமணி. - அப்போது, ஆனந்தன் குண்டுமணியைப் பார்த்து, டேய், இந்த ரமணியைப் பார்த்தாயா? என்னைப் போலவே உயரம் ! கிறமும் என் கிறம்தான்! அதனுல் தான் எனக்கும் இவனுக்கும் வித்தியாசம் தெரியாமல், பேணுவை நான் திருடியதாக என்னைப் பிடித்து ஜெயிலுக்குள்ளே தள்ளிவிட்டார்கள் அந்தப்பட்டனத் துப் போலீஸ்காரர்கள். சரி, அதைப் பற்றி இப்போது என்ன பேச்சு' என்றன். பிறகு அந்தப் பையனிடம் ரமணி நல்ல வேளையாக நீ அகப்பட்டுவிட்டாய். 傘。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/117&oldid=807844" இலிருந்து மீள்விக்கப்பட்டது