பக்கம்:பர்மா ரமணி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#12 பர்மா ரமணி. உடனே ஆனந்தன் அந்தப் பையனைப் பார்த்து. எஏனப்பா, உன் பெயர் என்ன ?’ என்று கேட்டான். என் பெயர் எதுவாயிருந்தால் உனக்கு என்ன?” என்ருன் அந்தப் பையன். "இல்லை.என் மாமா கடிதம் எழுதியிருக்கிருர் உன் பெயர் ரமணிதானே!” என்று கேட்டான் ஆனந்தன். - : அதற்குள் குண்டுமணி அருகில் வந்து, தம்பி, உள்ளதை மட்டும் ஒளிக்கவே ஒளிக்காதே. உன் கன் மைக்காகத்தான் கேட்கிருேம். கீ மட்டும் ரமணியா யிருந்தால் எவ்வளவு குஷியாக இருக்கலாம், தெரியுமா? இப்போதே உன்னை அழைத்துப் போய், பெரிய கடை வீதியில் இருக்கிறதே ஒரு பெரிய ஹோட்டல், அதிலே பாதாம் அல்வா, பாசக்தி, லட்டு, ஜிலேபி, மசால்தோசை பாதாம்கீர், புளியோதரை எல்லாம் வாங்கித் தருவோம். என்ன சொல்கிருய் ? என்று கேட்டான். உடனே அந்தப் பையன், ஒரு நிமிஷம் யோசித் தான். பிறகு சிரித்துக்கொண்டே, அடடே, என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களே ! ஆமாம், கான்தான் ரமணி என்று உங்களுக்கு யார் சொன்னது? என்று கேட்டான். எயார் சொல்ல வேண்டும் ? அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்க எங்களுக்குத் தெரியாதா, என்ன ? என்ருன் குண்டுமணி பெருமையோடு, ஆமாம் ரமணி, உன்னை நாங்கள் மூன்று. நாட் களாக எங்கேயெல்லாம் தேடி அலைந்தோம் தெரியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/116&oldid=807843" இலிருந்து மீள்விக்கப்பட்டது