பக்கம்:பர்மா ரமணி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னத்தில் அறை F 1 # கொண்டு வருகிருன். எதிரே ஒரு காளை மீது ஒருவன் ஏறி முரசு அடித்துக்கொண்டு வருகிருன். யானையும் கா8ளயும் டங்’ என்று முட்டிக் கொள்கின்றன. என்ன ஆச்சரியம்! யானையின் தலையும், காளையின் தலையும் ஒன்ருகி விடுகின்றன! இரு வெவ்வேறு மிருகங்களுக்கு ஒரே தலை யானையை மட்டும் பார்த்தால், யானையின் தலை தெரியும் கா8ளயை மட்டும் பார்த்தால் காளையின் தலை தெரியும் இப்படி ஓர் அதிசய சித்திரம்! - அவன் ஆச்சரியத்துடன் இன்னுெரு சித்திரத்தைப் பார்த்தான். அதில் எட்டுக் குரங்குகள் இருக்கின்றன. ஆனல், அந்த எட்டுக் குரங்குகளுக்கும் ஒரே தலைதான்! உடல்தான் எட்டு! இப்படிப் பல அற்புத ஓவியங்களை அந்தப் பையன் பார்த்துக்கொண்டே யிருந்தான். 'அடேயப்பா பார்ப்பதற்கே கழுத்து வலிக்கிறதே! எழுதும்போதுஅந்த ஓவியன் எவ்வளவு சிரமப்பட்டிருப் உான்!” என்று கூறியபடி ரசித்து கின்ருன். அப்போது ஆனந்தனும் குண்டுமணியும் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். உடனே ஆனந்தன், டேய் குண்டுமணி, கான் மெதுவாக அவன் பக்கத்திலே போய் நிற்கிறேன். என் உயரமும் அவன் உயரமும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல், பிறகு நான் பார்த்துக் கொள் கிறேன்” என்று கூறிவிட்டு, மெல்ல கடந்தான். அந்தப் பையனின் அருகிலே போய் கின்ருன். உடனே குண்டு மணி, வித்தியாசமே இல்லை: ஒரே உயரம்' என்று கத்தின்ை. ~ * சத்தத்தைக் கேட்டதும் அந்தப் பையன் திரும்பிக் குண்டுமணியைப் பார்த்தான். குண்டுமணியின் உரு வத்தைப் பார்த்ததும், அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/115&oldid=807842" இலிருந்து மீள்விக்கப்பட்டது